ஊரடங்கை மீறி அதி வேகமாக செக் போஸ்ட் தடுப்பை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர், அங்கு உள்ள இரும்பு தடுப்பில் மோதிய வேகத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் மச்செரியல் மாவட்டத்தில் உள்ள ஜன்னாரம் பகுதியில் கொரோனா பரவல் தீவிரமாக காணப்பட்டு உள்ளது. இதனால், அந்த பகுதி உட்பட, அந்த மாநிலம் முழுவதும் தற்போது மழுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, அந்த பகுதியின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அதன் படி, அங்குள்ள மச்செரியல் மாவட்டத்தில் உள்ள ஜன்னாரம் பகுதியில் போலீஸ் செக் போஸ்ட் ஒன்று செயல்பட்டில் உள்ளது. அங்கு போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியாக, அந்த வழியாக வரும் வாகனங்களை மறித்து, “எந்த காரணத்திற்கு எங்கு சென்றுக்கொண்டிருக்கிறார்கள்” என்று, கேள்விகளை கேட்கும் போலீசார், அந்த பயணிகள் கூறும் காரணங்கள் சரியானதாக இருந்தால் மட்டுமே, அவர்களை அந்த செக் போஸ்ட்டில் இருந்து அனுமதிக்கிறார்கள்.

அப்படி, காரணம் சரியாக இல்லாத பயணிகள் மீது வழக்கும், அபராதமும் விதித்து போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன் படி, குறிப்பிட்ட அந்த செக் போஸ்ட்டை நோக்கி இளைஞர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வேகமாக வருகிறார். அப்போது, அங்குள்ள செக்பேஸ்ட்டின் கம்பி தடுக்கும் வகையில் இருக்கிறது. அந்த தடுப்பை தாண்டி நிற்கும் போலீசார், முன்கூட்டியே வேகமாக வரும் அந்த இருசக்கர வாகனத்தை பார்த்து நிறுத்தும் படி. கையை காட்டிக்கொண்டே இருக்கிறார்.

ஆனால், போலீசாரை கண்ட அந்த இளைஞர், தனது வாகனத்தை நிறுத்தாமல் இன்னும் வேகமாக அந்த செக்போஸ்டை கடக்க முற்படுகிறார். அத்துடன், அந்த இளைஞனும், தனது வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக வந்ததால், தற்று தடுமாறிப்போன அந்த போலீஸ்காரர், அந்த செக் போஸ்ட் தடுப்பை மேலே தூக்கி விட முயன்று தட்டுதடுமாறி போகிறார். ஆனால், அதற்குள் மின்னல் வேகத்தில் வந்த அந்த இருசக்கார வாகனத்தில் இரு இளைஞர்கள் இருப்பது அப்போது தான் தெரிய வந்தது. 

இதில், வாகனத்தை ஓட்டி வந்த இளைஞன், தனது தலையை குனிந்து செக்போஸ்ட்டை கடந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த ஒரு இளைஞனால் ஓரளவிற்கு மேல் குனிய முடியவில்லை. இதனால், பின்னர் அமர்ந்திரந்த அந்த இளைஞன், செக் போஸ்ட்டின் கம்பியில் மோதி, அங்கு தூக்கி வீசப்படுகிறார். ஆனால், வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரக்க சேலான காயம் ஏற்பட்ட நிலையில், தனது வாகத்தை நிறுத்தாமல், சற்று தொலைவில் ஓட்டிச் சென்று, தனது நண்பன் பின்னால் இல்லை என்பதை தெரிந்த பிறகே, கடும் அதிர்ச்சியடைந்து, தனது வாகத்தை நிறுத்தி உள்ளார்.

இப்படியாக, பின்னால் அமர்ந்திருந்த இளைஞரின் தலை இரும்பு தடுப்பில் மோதி. அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில், உயிரிழந்த இளைஞர் சுதேனி வெங்கடேஷ் கவுட் என்று தெரிய வந்தது. அதே போல், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் லக்செட்டிபேட்டை மண்டலத்தில் உள்ள கோத்தக்குமுகுதேம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி சந்திரசேகர் என்பதும் தெரிய வந்தது. 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அதி வேகமாக செக் போஸ்ட் தடுப்பை கடக்க முயன்றபோது, இரும்பு தடுப்பில் மோதி இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.