தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக திரைப் பயணத்தை தொடங்கிய சிலம்பரசன் காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.தொடர்ந்து மன்மதன், கோவில் ,இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா இயக்குனர் மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். 

நடிகர் சிலம்பரசன் கடைசியாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு முன்பு வரை  சற்று உடல் பருமனுடன் இருந்த சிலம்பரசன் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி தற்போது காதல் அழிவதில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான போது இருந்த தோற்றத்தில் தற்போது மாறி உள்ளார். அவருடைய இந்த புதிய தோற்றம்  அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

மேலும்  சிலம்பரசன் இதற்காக எடுத்துக்கொண்ட சிரத்தை அவரது ரசிகர்கள் பலருக்கும் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு பற்றிய உந்து சக்தியாக அமைந்தது. இந்த நிலையில் சிலம்பரசன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதுவரை பார்த்திராத அந்த போட்டோ ஷூட்டின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது . அந்த போட்டோ ஷூட் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில்  பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படம் திரைக்கு வர தயாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சிலம்பரசன் ,S.J.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள மாநாடு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.