தமிழில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்து வெளிவந்த த்ரில்லர் திரைப்படமான யாவரும் நலம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நீது சந்திரா. தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்தியாவின்  முன்னணி மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலம் மிகுந்த பிரபலமடைந்த நீதுசந்திரா தொடர்ந்து அமீர் இயக்கத்தில் வெளிவந்த ஆதி பகவான் திரைப்படத்திலும் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருந்தார்.அடுத்ததாக இந்த வருடம் தயாராகிற நெவர் பேக் டவுன் ரிவோல்ட் என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் களமிறங்க உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை நீத்து சந்திரா தற்போது தன்னுடைய ஒரு பழைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிகினி உடையில் நீச்சல் குளத்தில்   சூரிய ஒளியில் அவர் படுத்திருக்கும் புகைப்படம்  தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது

 திரைப்படங்களில்  நடிப்பது மட்டுமல்லாது தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான டிடி நேஷனல் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ரங்கோலி என்ற  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.