விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி வரை வீட்டில் இருந்து ஏகப்பட்ட ரசிகர்களின் ஓட்டுக்களை தட்டிச் சென்றார். நிகழ்ச்சியில் இறுது வரை தாக்குப் பிடித்து ரசிகர்களின் மனங்களை வென்றவர் ரம்யா பாண்டியன். தனது சிரிப்பால் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளித்துக் கொண்டு இருந்த ரம்யா பாண்டியன் சைலன்ட் கில்லர் என்று சக போட்டியாளர்கள் மத்தியில் பெயரெடுத்தார்.

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகை வாணி போஜன் உடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் பூஜை போடப்பட்டு பலரது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அள்ளினார்.

இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு புதிதாக ரம்யா பாண்டியன் BMW கார் வாங்கி உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. நீல நிறத்தில் இருக்கும் அந்த கார் அருகே கெத்தாக நின்றபடி போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் ரம்யா. 

ரம்யா பாண்டியன் வாங்கியுள்ள புதிய BMW கார் நம்பர் பிளேட்டில் RPBMW4 என்கிற எண் ஒட்டப்பட்டு இருக்கிறது. BMW GT காரை தான் ரம்யா பாண்டியன் வாங்கி உள்ளார். 2011ல் 21ஜி பஸ்சில் சென்ற ரம்யா பாண்டியன் தற்போது 2021ல் GT கார் வாங்கி இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார்.

ரம்யா பாண்டியன் வாங்கி இருக்கும் காரின் விலை 70 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என கூறப்படுகிறது. விலையை கேட்டும் ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். வாழ்த்து மழையில் நனையும் ரம்யாவுக்கு ஸ்பெஷலான வாழ்த்துக்களை பதிவு செய்கிறது நம் கலாட்டா. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parasu Pandian (@parasu_pandian)