ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் வழங்க இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் விஜய் டிவியில் ரிலீசான படம் மண்டேலா. அதைத்தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. 

விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் முதல் படத்திலேயே தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின். 

கடந்த சில நாட்களாகவே டாக் ஆஃப் தி டவுனில் இருக்கும் படம் என்றால் இந்த படம் தான். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி மண்டேலா படம் பார்த்து விட்டு படத்தை பாராட்டியிருந்தார். சில நாட்களுக்கு முன்னர் மண்டேலா படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்த்தேன். யோகி பாபுவின் நடிப்பைக் கண்டு வியந்தேன். என்ன ஒரு நடிகர். என்ன ஒரு கதை என்று பதிவிட்டிருந்தார். 

சமீபத்தில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் மண்டேலா திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்னர் புகாரளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் படத்தின் மேக்கிங் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கீழே உள்ள லிங்கில் காணலாம்.