தமிழகத்தில் சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான கந்த சஷ்டி கவசம் தொடர்பான பிரச்சனை மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது.  கருப்பர் கூட்டம் என்ற யூடூப் சேனல் முருகரை இழிவுபடுத்தும் விதமாக கந்தக் கஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக்கள் எழுந்திருந்தது. 

பொதுமக்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என பல்வேறு தரப்பின் சார்பாக மிகப்பெரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழக பாஜக தலைவர் வேல் முருகன் வேல் யாத்திரை மேற்கொள்ளப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு இடது சாரி கட்சிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள், பத்திரிக்கயாளர்கள் என பல்வேறு எதிர்ப்புக்கள் எழுந்த நிலையில்  அரசு தரப்பில் வேல் யாத்திரை நடத்த தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தடையை மீறி தமிழகத்தில் வேல் யாத்திரை நடைபெறும் என எல். முருகன் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் நலனை மனதில் கொண்டு வேல் யாத்திரிக்கைக்கு அனுமதி தர முடியாது என அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில்  தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் கடந்த வாரம்  சென்னையில் இருந்து தனது தொண்டர்களுடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திருத்தணியை நோக்கி வேல்யாத்திரைக்காக அலங்கரிக்கப்பட்ட வேனில் சென்றார். 

ஏற்கனவே வேல்யாத்திரை பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திடீரென்று காவல்துறையினர் அனுமதி வழங்கியது பல்வேறு தரப்பில் மிகப்பெரிய பேசு பொருளானது.பின்பு அங்கிருந்து அவர் யாத்திரையை தொடங்க முற்பட்ட போது காவல்துறையினர் அங்கு சென்று பாஜகவை சேர்ந்த எல்.முருகன், எச்.ராஜா, அண்ணாமலை ஆகியோரை கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றனர்.

கோடிக்கணக்கான மக்களின் வீடுகளில் ஒலிக்கும் கந்த கஷ்டி கவத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காத அரசு, அதை அடையாளப்படுத்திய பாஜகவை மட்டும் எதிர்ப்பதன் காரணம் என்ன/ இதற்கு பின்னால் இருப்பவர்கள் யார்? போன்ற பல கேள்விகளை  பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்வைத்தார்.

இந்தநிலையில் தமிழகத்தில் வேல்யாத்திரை நிச்சயமாக  நடைபெறும் என்று தெரிவித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அதற்கான முழு நடவடிக்கைகளையும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார். அதன் அடிப்படியில் திருத்தணியில் தொடங்கிய வேல்யாத்திரை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக நடைபெறும் என அறிவித்தார். நேற்று பாஜக தலவர் எல்.முருகன் தலைமயில் கடலூரில் வேல்யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. 

இந்த கூட்டத்திற்காக செல்லும் வழியில் காட்டங்குளத்தூரில் குஷ்பு சென்ற கார் விபத்துக்குள்ளானது. கார் மிகப்பெரிய சேதம் அடைந்த நிலையில் குஷ்பு எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பினர். அதன் பின்னு சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்த குஷ்பு இது திட்டமிட்டு என் மீது நடக்கும் தாக்குதல் என்றும், இதனால் நான் வேல்யாத்திரைக்கு செல்வது தடைபடாது என்றும் தெரிவித்தார். அதபின்பு வேறு ஒரு கார் வரவழைக்கப்பட்டு வேயாத்திரைக்கான தன் பயணத்தை தொடங்கினார்.

இன்று கடலூரில் நடைபெற இருந்த வேல்யாத்திரைக்கு முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எல்.முருகன் ; வேல்யாத்திரை தமிழகத்தில் மிகவும் அவசியமானது.

கந்த சஷ்டி கவத்தை மிகவும் மோசமாக கொச்சைப்படுத்தி இருக்கிறது கருப்பர் கூட்டம். அந்த கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் திமுகவும், அதன் கூட்டணி கட்சியும் தான் இருக்கிறது என்று நேரடியாக குற்றம் சாட்டினார். திமுகவின் போலி முகத்தை காட்டவே இந்த வேல்யாத்திரை நடப்பதாக தெரிவித்தார். 

தமிழக மக்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும் , தமிழக மக்களுக்கு நீங்கள் செய்த துரோகத்திற்கு அவர்கள் சரியான் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார். 
ஸ்டாலின் கனவு நிச்சயமாக நிறைவேறாது. ஸ்டாலின் கண்ட கனவு பொய்யாகிபிடும் என்றூம், தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக  சுட்டிக்காட்டுபவரே கோட்டையில் முதல்வராக அமர முடியும் என்றும் தெரிவித்தார்.

இதே கூட்டத்தில் பேசிய குஷ்பு; இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்காக வேல் யாத்திரை நடக்கிறது,. பாஜகவிற்காக வேல்யாத்திரையை நாங்கள் நடத்தவில்லை. வரப்போகும் தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனை இருப்பதாகவும். தமிழகத்தை பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பாஜக சந்திக்கும் என்றும் குஷ்பு தெரிவித்தார். கூட்டத்திற்கு பிறகு வேல்யாத்திரை செல்ல முயன்ற எல்.முருகன், அண்ணாமலை, ராகவன், இளஞ்செழியன் , குஷ்பு உள்ளிட்ட 789 பேர் கடலூரில் கைது செய்யப்பட்டனர். பாஜகவின் இந்த வேல்யாத்திரையையொட்டி கடலூர் முழுவதும் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.