பா. ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார். மத்திய மந்திரி அமித்ஷாவின் வருகையையொட்டி தமிழக பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த 2 நாள் பயணம் முக்கியதுவம் வாய்ந்ததாக அரசியலில் களத்தில் கருதப்படுகிறது. 

எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமித்ஷா வருகையையொட்டி, சென்னை விமான நிலையம் மற்றும் கலைவாணர் அரங்கம் உள்பட பல முக்கிய பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. விமான நிலையம் முதல் வழிநெடுக அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர் மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வருவார். அங்கிருந்து காரில் புறப்படும் அமித்ஷா, ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்கு மதியம் 2 மணிக்கு வருகிறார். பின்பு கலைவாணர் அரங்கத்தில் விழா நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுப்பார் என திட்டமிட்டப்பட்டுள்ளது.

முதன்மையாக திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்ட  விழாவிலும் மற்றும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்துக்கொள்கிறார்.  மேலும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும் அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கிறார். 

விழா முடிந்ததும் மீண்டும் ஓட்டல் லீலா பேலசுக்கு, அமித்ஷா வருகிறார். அன்று இரவு 7 மணிக்கு தமிழக பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், தலைவர்களையும் மற்றும் பா.ஜ.க. உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடக்க உள்ளது. 

இத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கவே அவர் சென்னை வருவதாக பாஜகவினர் கூறினாலும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்துவதே பயணத்தின் நோக்கம் . ஆனால் கடந்த மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தயங்குகிறது. இருப்பினும் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் வெல்ல முடியாது என்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதை தவிர வேறு வழி பாஜகவுக்கு இல்லை. 

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், அதிக இடங்களை கேட்டு அதிமுகவிற்கு பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கிறது என பேச்சுக்கள் இருக்கும் நிலையில், பாஜகவிற்கு எப்படியாவது 10-க்கும் அதிகமான சீட் கேட்டு அமித்ஷா வலியுறுத்தவே இந்த சந்திப்பு என்கிறார்கள் அரசியல் விமசகர்கள். இதையொட்டி, இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் , எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில்  அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது கூட்டணி குறித்தும், பாஜகாவுக்கு எத்தனை சீட் கொடுக்கலாம் என்றும் முடிவெடுக்கப்படும் என்கிறார்கள்.

மேலும் பாஜக நடத்தி வரும் வேல்யாத்திரைக்கு அதிமுக தடை விதித்தது மற்றும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஆணையம் அமைத்தது அதிமுக. இதனால் அதிமுக - பாஜக இடையிலான போக்கு முன்பு போல் இல்லை எனவும் தற்போது எடப்பாடி பழனிசாமி சற்று கரராக நடந்துக்கொள்கிறார் எனவும் இதைப்பற்றி விசாரித்து உடனடி தீர்வு காண் அமித்ஷா எண்ணுவாகவும் சொல்லப்படுகிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு தனி விமானத்தில் மத்திய மந்திரி அமித்ஷா மீண்டும் டெல்லி செல்லும் முநடிகர் ரஜினிகாந்த்யும் சந்தித்து  முக்கிய ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமித்ஷா வருகை தமிழக் அரசியலில் என்ன மாற்றம் ஏற்படுத்தும் என்ன பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

- கே. அபிநயா