இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட மணிக்கூண்டு டாஸ்க் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் இரவு பகலாக டாஸ்க் செய்தனர். 45 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற டாஸ்க் காரணமாக போட்டியாளர்கள் அனைவரும் அதிகம் சோர்வுடன் காணப்பட்டனர்.

இந்த டாஸ்க் நேற்றுடன் முடிவு பெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. அதில் அர்ச்சனா, சோம் மற்றும் சம்யுக்தா டீம் வெற்றி பெற்றது. அவர்கள் 18 நிமிட வித்தியாசத்தில் 9 மணி நேரத்தை கணித்து இருக்கிறார்கள். மேலும் ரியோ டீம் 3 மணி நேரத்தினை கணிக்க ஒரு நிமிடம் மட்டுமே வித்தியாசம் காட்டினர். அதனால் இந்த இரண்டு அணிகளில் இருப்பவர்கள் தான் அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார்கள்.

தவறாக டாஸ்க் செய்தபிறகும் அதை நியாயப்படுத்தி பாலாஜி பேசிக்கொண்டு இருந்தார். அதனால் அவரை ரம்யா கலாய்த்தார். ஒவ்வொருமுறையும் எதாவது தவறு செய்துவிட்டு இப்படி சொல்லி சமாளிக்கிறார் என ரம்யா கலாய்த்தார். 

நேற்று சுசித்ரா மிகவும் கோபமாக கேமரா முன்பு நின்று பேசினார். வெளியுலகமே பெட்டெர்.. எல்லாரும் ஏன் என்னை வெச்சி செய்றாங்க.. பாலா என்னிடம் வந்து ஏன் இப்படி சொல்கிறார். நீ ஏன் டஸ்டிங் செய்தாய், அதனால் luxury பட்ஜெட் பாதிக்கப்படும், அதனால் உன்னை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என சொல்கிறார் என சுசித்ரா பேசினார்.

மேலும் இந்த டாஸ்கில் சொதப்பிய இருவரை தேர்ந்தெடுத்து ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. அதனால் அனைவரும் சேர்ந்து பாலாஜி மற்றும் சுசித்ராவை ஓய்வறைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அங்கே வெளியே நின்று பாலாவை பார்த்து சிரிக்கிறார் ஷிவானி. டாஸ்கில் புள்ளிகள் குறைவதால் இந்த வார எவிக்ஷனில் பாலாவின் பெயர் இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.