பா.ஜ.க சார்பில் கடலூரில் வேல் யாத்திரி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதில் கலந்து கொள்வதற்காக குஷ்பு காரில் பயணித்தார். அப்போது மேல்மருவத்தூர் அருகே  குஷ்பு சென்று கொண்டிருந்த கார் , கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது என்ற செய்தி வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் யாருக்கு காயங்கள் இன்றி அனைவரும் உயிர் தப்பினர். 

இதையடுத்து குஷ்பு மாற்று காரின் மூலம் கடலூர் சென்றார். விபத்து குறித்து குஷ்புவின் கார் ஓடுநர் முருகனை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  அப்போது விபத்து குறித்து , "கன்டெய்னர் லாரி எங்கள் கார் மீது மோதியது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், இறையருளாலும் நான் பத்திரமாக உள்ளேன். என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் கடன்பட்டிருக்கிறேன் நன்றி. யாத்திரையைத் தொடர்ந்து நடத்த இன்னும் எத்தனை தடை வந்தாலும் யாத்திரையைத் தொடர்ந்து நடத்துவேன். எந்த விபத்தும் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறினார். 

மேலும் அவர், ஊடகங்கள் தகவலை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். எனது கார் சரியான பாதையில் தான் பயணித்தது. ஆனால் கன்டெய்னர் லாரி எந்த திசையிலிருந்து வந்தது என எங்களுக்குத் தெரியவில்லை. அந்த வாகனமே தான் எங்களின் கார் மீது மோதியது.  கடலூர் வேல் யாத்திரைக்கான பயணம் தொடர்கிறது. கடவுள் முருகன் தான் எங்களை காப்பாற்றி இருக்கிறார். என் கணவர் வணங்கும் தெய்வம் எங்களை கைவிடவில்லை. 

அவர் நம்பிக்கையின் பலனை நான் இன்று கண்டுகொண்டேன். இந்த விபத்து தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ” என்றார். மாற்று காரின் மூலம் கடலூர் சென்று அங்கு நடைபெற்ற வேல் யாத்திரையில் கலந்துக்கொண்டு குஷ்பு, “மரணத்தைத் தாண்டி வேல் யாத்திரையில் பங்கேற்று உள்ளேன். எது நடந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும் நம்முடைய நோக்கம் ஒன்றுதான். எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். 2021ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும்” என தெரிவித்தார்.

விபத்துகுறித்து காவலதுறையினர் விசாரித்து வரும் நிலையில் நேற்று இரவு மீண்டும் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அதில் ‘ எனக்கு இரங்கல் எழுத சிலர் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டுயிருந்தனர். அவர்களுக்கு நான் உயிருடன் மீண்டு வந்தது செயல்படுவது அதிர்ச்சியை கொடுத்துயிருக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் அன்பால் நான் மீண்டு வந்துள்ளேன். எனது குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறார்கள். கடவுளின் ஆசிர்வாதம் என் மீது இருக்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டை’ என்று ட்வீட் செய்துள்ளார். ஒவ்வொரு ‘எதிரிக்கும்’ தனித்தனியாக பதிலளிப்பார் என்ற பெயர் குஷ்புக்கு என்றும் உண்டு. 

அவர் காங்கிரஸில் இருந்தது போது தனது, ட்வீட்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பெயர் குறிபிட்டு ட்வீட் செய்வார். 

மேலும் , காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுகளிலிருந்து அவருடைய கருத்து சற்று வேறுப்பட்டு இருந்தாலும் கூட, தென் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக அவர் செய்த வெற்றிகரமான பிரச்சாரத்திற்கு மூத்த திமுக தலைவர்கள் கூட அவரை வாழ்த்தியிருக்கிறனர். 

இருந்தும் காங்கிரஸில் இருந்தது போது, அங்கு சில தலைவர்களுடன் கருத்து மோதல்கள் காரணமாக கட்சிவிட்டு வெளியேறிய குஷ்புவின், நேற்றைய ட்வீட் அந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்காக தான் என அரசியல் தரப்பில் பேசிவருக்கிறார்கள்.

- கே. அபிநயா