முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம்.. பின்னணி என்ன?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம்.. பின்னணி என்ன? - Daily news

தமிழக முதல்வர் எடப்பாடி,  இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேச உள்ளார். 79.75 கோடி ரூபாய் மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டு இருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.  


இந்த நினைவிடத்தின் திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடியை அழைப்பதற்காக  எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையிலிருந்து டெல்லி செல்ல உள்ளார். இதனிடையே  அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் , அமித்ஷாவுடனான இந்த சந்திப்பில் அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்து, முதல்வர் வேட்பாளர் இறுதி செய்யப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் களத்தில் திமுகவுக்கு சவால் அளிக்கும் வகையில் பல நலத்திட்டங்களை பிரச்சாரத்தின் போது பட்டியிலிட இருக்கிறார் எனவும் பிரதமரிடம் தமிழகத்துக்கு அதிக நலத்திட்டங்கள் மற்றும் நிதி உதவி குறித்து கோரிக்கை வைக்க உள்ளார் எனவும்  சொல்லபடுகிறது. 

 

Leave a Comment