இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இந்திய அணிக்கு முதல்முறையாக தேர்வாகியுள்ளார் மும்பையை சேர்ந்த முப்பது வயதான சூர்யகுமார். கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடி  15 இன்னிங்சில் 480 ரன்களை குவித்து அதிக கவனம் ஈர்த்தார். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்த்துயிருந்த நிலையில், அந்த தொடரில் அவரை தேர்வு செய்யாதது , பெரிதும் விமர்சிக்கப்பட்டது.  


அந்நிலையில் சூர்யகுமார், ‘’ இந்திய அணி ஆஸ்திரேலிய தொடருக்கு சென்றிருந்தபோதே நான் தேர்வு செய்யப்படுவேன் என்று நினைத்தினேன். ஆனால் ஏமாற்றாமே கிடைத்தது. அதன் பிறகு ஐபிஎல் மட்டுமல்லாது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ஸ்கோர் செய்திருந்ததால் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினேன், ஆனால் அப்போது ஏமாற்றமே கிடைத்தது. ஆஸ்திரேலிய அணியில் நான் தேர்வாகாதது எனக்கு பெரிதும் கஷ்டமாக உள்ளது” என்று தெரிவித்து இருந்தார். 


இந்நிலையில் சூர்யகுமார் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார்.    


முதல்முறையாக இந்திய அணிக்கு விளையாட இருக்கும் சூர்யகுமாருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர்,  இர்பான் பதான் போன்றோர் வாழ்த்தி வருகிறார்கள்.