காதலுக்காக கொரோனா விதிமுறைகளை மீறிய அஜித் பட வில்லன் நடிகர் விவேக் ஓபராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று 2 வது அலையாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. இதனால், பல்வேறு உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து நீடித்துக்கொண்டே வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவின் சில முக்கிய நகரங்களிலும் இரவு நேர ஊரங்கு இன்றும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த இரவு நேர ஊரடங்கில் பல்வேறு உத்தரவுகளும், கெடுபிடிகள் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அதன் படி, கொரோனா விதி முறைகளை மீறி செயல்பட்டதற்காக நடிகர் விவேக் ஓபராய் மீது, மும்பை போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

இந்தி நடிகர் விவேக் ஓபராய், அஜித்தின் “விவேகம்” படத்தில், பயங்கரமான வில்லனாக நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கான பெயரை பதிவு செய்தார். 

இப்படியான சூழ்நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று, தனது மனைவி உடன், நடிகர் விவேக் ஓபராய் பைக்கில் ரைடு சென்றிருக்கிறார்.

இந்த வீடியோ காட்சியை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகர் விவேக் ஓபராய் பதிவிட்டு இருந்தார். இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ மும்பை மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் வைரலானது.

அந்த வீடியோ காட்சியில் நடிகர் விவேக் ஓபராய், முகத்தில் மாஸ்க் போடாமல் இருந்து உள்ளார். அத்துடன், அவர் ஹெல்மெட் அணியாமலும் இருந்திருக்கிறார்.

இதனால், அவர் கொரோனா விதி முறைகளை மீறியதற்கும், இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியாமல் இருந்தார் என்றும், குற்றச்சாட்டுக்கள் 
முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாக, நடிகர் விவேக் ஓபராய் மீது, மும்பை ஜுகு காவல் துறையினர் தற்போது வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதித்து இருக்கிறார்கள். 

மேலும், “மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் குறையாத சூழலில், இது போன்று கொரோனா விதி முறைகளை மீறி உள்ளதால் இப்படியான ஒரு நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளதாகவும், மும்பை காவல் துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, காதலுக்காக கொரோனா விதிமுறைகளை மீறிய அஜித் பட வில்லன் நடிகர் விவேக் ஓபராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது சம்பவம், இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

அதே போல், “குண்டு வெடிப்பு வழக்கில் கைதான நடிகர் சஞ்சய் தத் எந்த அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்? அதற்காகப் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் என்ன? என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று, மகாராஷ்டிர தகவல் ஆணையத்திற்கு மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.