இளம் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டியே இளைஞர் ஒருவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்த 22 வயதான முன்னா, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை ஒருவருடன் நட்பாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், அந்த இளம் பெண்ணை அவருக்கேத் தெரியாமல் முன்னா தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த இளம் பெண்ணிடம் அந்த வீடியோ காட்டி, “உனது குடும்பத்தாரிடம் பரப்பி விடுவேன்” என்று மிரட்டி இருக்கிறான். இதனால், பயந்து போன அந்த இளம் பெண், அவன் சொல்வதை எல்லாம் கேட்டிருக்கிறாள்.

அதன் படி, அந்த ஆபாச வீடியோவை வைத்தே, அந்த இளம் பெண்ணை முன்னா, பல முறை தொடர்ச்சியாக மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான்.

இந்த நிலையில், அந்த பெண்ணிற்கு கடந்த 8 ஆம் தேதி திருமணம் நடந்து உள்ளது. அந்த பெண் திருமணம் முடிந்து, தன் கணவருக்கு வீட்டிற்குச் சென்றிருக்கிறார். ஆனாலும், அந்த இளம் பெண்ணை திருமணத்திற்குப் பின்னரும் முன்னா, தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார். 

ஆனால், முன்னாவின் ஆசைக்கு அந்த பெண் இறங்கி வரவே இல்லை. இதனால், ஆத்திரமடைந்த முன்னா, அந்த பெண் பற்றிய தன்னிடம் உள்ள வீடியோக்களை அந்த பெண்ணின் கணவருக்கும் அனுப்பி வைத்து உள்ளார். இந்த வீடியோவை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர், மனைவியை அவரது அம்மா வீட்டிற்கே விரட்டி அடித்து உள்ளார்.

இதனால், அம்மா வீட்டிற்கு திரும்பிய அந்த இளம் பெண், தனது பெற்றோருடன் சென்று, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இளம் பெண்ணை மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த முன்னாவை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், 7 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 
 
மயிலாடுதுறை மாவட்டம் கீழ நாஞ்சில் நாட்டில் வசித்து வரும் குருமூர்த்தி என்பவரின் மகள். அங்குள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், அந்த சிறுமி அந்த பகுதியில் மாலை நேர டியூசனுக்கு சென்று உள்ளார். அப்போது, அதே தெருவில் வசிக்கும் 55 வயதுடைய மூர்த்தி என்பவர், அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பள்ளியில் படிக்கும் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட 55 வயது மூர்த்தியை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.