தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.

 இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருந்தது ஆனால் கொரோனா காரணமாக இந்த ஷூட்டிங் தள்ளிப்போனது.Beast என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டன.

செம மாஸாக இருக்கும் இந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.தற்போது இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவு இருவரும் கலாட்டாவிற்காக பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளனர்,அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்,படத்தின் ஓப்பனிங் ஸ்டண்ட் காட்சி செம மாஸாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மிகவும் என்ஜாய் செய்வார்கள் என்றும் தெரிவித்தனர்.