நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கணிசமாக குறைந்து வருகின்ற நிலையில், பிரதமர் மோடி நாட்டு மகக்ளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சற்று முன்பு நீண்ட உரையாற்றினார்.

பிரதமர் மோடி ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள்

- பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டத்தின் கீழ், தீபாவளி பண்டிகை வரையில், ஏழை - எளிய மக்களுக்கு இலவசமாக ரேசன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படும். 

- வறுமைக்கோட்டுக்கு கிழே உள்ளவர்களுக்கு தீபாவளி வரை உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.

- பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டமானது, வரும் நவம்பர் மாதம் வரை செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலமாக 80 கோடி நாட்டு மக்கள் பயனடைவார்கள். 

- 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

- இந்தியாவில் மேலும் 3 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. 

- மூக்கு வழியாக செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. 

- கொரோனா தடுப்பூசிகளின் மொத்த உற்பத்தியில் மத்திய அரசு 75 சதவீத தடுப்பூசி கொள்முதல் செய்யப்படம் 

-  மாநில அரசுகள் இனி தடுப்பூசிக்காக செலவழிக்கத் தேவையில்லை. 

- மாநில அரசுகளுக்கு ஜூன் 21ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். 

- தடுப்பூசி விநியோகத்தில் மத்திய அரசே இனி முடிவெடுக்கும்.

- மே மாதம் முதல் தடுப்பூசி கொள்கையில் மாநிலங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

- விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.

- குழந்தைகளுக்கு அளிப்பதற்காக 2 தடுப்பூசிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

- இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவிகித்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி மக்களுக்கு செலுத்தலாம்.

- முகக்கவசம் சமூக இடைவெளி போன்றவற்றை எக்காரணம் கொண்டும் மக்கள் கைவிட்டுவிடக்கூடாது.

- கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம், தனி மனித இடைவெளி முக்கியக் கவசமாக உள்ளது.

- மேலும் 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும்.

- மிகக்குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருவது தான் இந்தியாவின் சாதனை.

- ஊரடங்கு மற்றும் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கும் அதிகார்த்தை மாநிலங்களிடமே வழங்கப்பட்டு இருக்கிறது.

- இந்தியாவில் 7 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உள்ளன; அவற்றில் 3 நிறைவடையும் நிலையில் உள்ளன.