“எங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய நுஸ்ரத் ஜஹான் எம்.பி. மறுத்து விட்டார்” என்று, பெண் எம்.பி மீது தொழிலதிபர் நிகில் ஜெயின் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரபல நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஸ்ரத் ஜஹான், மிகவும் பாப்புலரான எம்.பி.யாக அறியப்பட்டு வருகிறார். அதற்கு காரணம், இதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆவேசமான உரைகள் தான், தன் மீதான அனைவரின் கவனத்தையும், அவர் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

அதாவது, பிரபல நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஸ்ரத் ஜஹான், கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரைக் கடந்த 2019 ஆம் ஆண்டு, துருக்கி நாட்டில் திருமணம் செய்து கொண்டார். 

இவர்களது திருமண புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் அந்த நேரத்தில் வெளியாகி பெரும் வைரலானது. அது, இந்தி சினிமா உலகிலும், இந்திய அரசியல் வட்டத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

திருமணத்திற்குப் பிறகு, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இவர்களது வாழ்வில் யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை, திருமணமான அடுத்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து விட்டனர். 

இது தொடர்பான சர்ச்சையானது, சமீபத்தில் எழுந்த நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன் மூலமாகத் தனது விளக்கத்தைப் பெண் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் தெரிவித்திருந்தார்.

அந்த அறிக்கையில், “நாங்கள் இருவரும் எப்போதோ பிரிந்துவிட்டோம். என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாரும் பேச வேண்டாம் என்று நினைத்ததால், நான் அதனைப் பற்றி எதுவும் வெளியே கூறவில்லை. 

நிகில் ஜெயினுடனான என் திருமணம் செல்லாது. அதற்குக் காரணம், இந்தியாவில் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்களுக்குச்
சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் அங்கீகாரம் தேவைப்படுகிறது. எங்களது திருமணம் அப்படி நடக்காததால், நாங்கள் அதனை முறையாகப் பதிவு செய்யவில்லை. எங்கள் பிரிவு எப்போதோ முடிந்துவிட்டது. எனது வங்கி கணக்குகளை நிகில் தவறாகப் பயன்படுத்தியதாகவும்” அந்த அறிக்கையில், எம்.பி. நுஸ்ரத் ஜஹான், தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனது முன்னாள் மனைவியின் அறிக்கைக்குப் பதில் அளித்து புதிய அறிக்கை ஒன்றைத் தொழிலதிபர் நிகில் ஜெயின், தற்போது வெளியிட்டு உள்ளார். 

இந்த அறிக்கையில், “திருமணத்தைப் பதிவு செய்யலாம் என்று நான் பல முறை நுஸ்ரத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். ஆனால், அவர் அதனை ஏற்க
மறுத்துவிட்டார். 

நான் அவர் பணத்தை எதையும் எடுக்கவில்லை. என் மீது அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்” என்றும், அவர் தனது அறிக்கையில் விளக்கம்
அளித்திருக்கிறார்.

இதனிடையே, பாஜகவைச் சேந்த அமித் மால்வியா, “நடிகை ரஹ்ரத் ஜகான் நாடாளுமன்றத்தில் திருமணம் ஆனது என்றார். ஆனால், தற்போது தனக்குத்
திருமணம் ஆகவில்லை என்கிறார்? இதன் உண்மைத் தன்மை என்ன” என்று, கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.