தமிழகத்தில் தீவிரமாகும் வடகிழக்குப் பருவமழை! - வானிலை மையம் அறிவுரை

தமிழகத்தில் தீவிரமாகும்  வடகிழக்குப் பருவமழை! - வானிலை மையம் அறிவுரை - Daily news

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், இதுபற்றி இன்று (நவம்பர் 16) செய்தியாளர்களிடம் கூறியவை :

``இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிகக் கனமழையும், 15 மாவட்டங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 18 செமீ மழையும், காஞ்சிபுரத்தில் 16 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும், விழுப்புரம், தஞ்சை, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், மதுரை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிகக் கனமழையும், 15 மாவட்டங்களில் கன மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 18 செமீ மழையும், காஞ்சிபுரத்தில் 16 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும், விழுப்புரம், தஞ்சை, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், மதுரை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு மிதமானது முதல் கனமழை பெய்யும்" என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்றைய நிலவரப்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. நேற்று (நவம்பர் 15), சென்னையின் தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

இதேபோல தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக வெயில் வாட்டி வந்த நிலையில், அதிகாலை முதல் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தஞ்சாவூர், பூதலூர், செங்கிப்பட்டி, திருவையாறு, கல்லணை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் தீபாவளி வியாபாரத்தில் ஈடுபட்ட வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால், விவசாயிகள் மத்தியில் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நேற்று வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சொல்லப்பட்டது. இதேபோல் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, ராமாநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியது.

Leave a Comment