டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சி தலைமையகத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த சிறு புத்தகத்தை வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வரையிலும் போராடுவோம் என விவசாயிகள் தெரிவித்திருந்த நிலையில், விவசாயிகளுடனான 10ம் கட்ட பேச்சு வார்த்தை நடைப்பெற உள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட்டு உள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ நாடு முழுவதும் சோகம் நிறைந்து உள்ளது. அதில் ஒரு பகுதி விவசாயிகளின் போராட்டம். விவசாயிகளுக்கு ராகுல் காந்தி என்ன செய்கிறார் என்பது விவசாயிகளுக்கு தெரியும். என்னிடம் கறை இல்லை. அதனால் நான் பயப்படவில்லை. இளைஞர்கள் இதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். மோடி அரசால் என்னை தொட முடியாது, ஆனால் சுட முடியும்.


மோடி அரசு அறிமுகப்படுத்திய ஏபிஎம்சி மற்றும் விவசாய முறையில் நடுத்தர வர்க்கம் முழுவதுமாக பாதிப்படையும். மேலும் இளைஞர்களுக்கு சுமை அதிகரிக்குமே தவிர வேலை வாய்ப்புகள் உருவாகாது.” என்றார்.