இந்தியாவில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட்  மற்றும்  பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்து இருக்கும் நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. 


150 நாடுகளுக்கு தடுப்பூசியை இந்தியா அனுப்ப உள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக பூடான் மற்றும் மாலத்தீவுக்கு கொரோனா தடுப்பு மருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் நட்பு நாடுகளான மொரீசியஸ், பிலிப்பைன்ஸ், மியான்மர், ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், மொரீசியஸ்  உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பப்பட உள்ளது. 


பூடானுக்கு 1.5லட்சம் கோவிஷீல்ட் டோஸ்களும், மாலத்தீவுக்கு 1 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகளும் அனுப்பி உள்ளோம். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் புதிதாக 15,223 பேருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 1 கோடியே, 6 லட்சத்து 10 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.