திருமணம் ஆன முதல் நாள் இரவு முன்ளாள் காதலி, காதலன் வீட்டிற்குள் நுழைய முயன்றதால், முதலிரவு அறையிலிருந்து புதுமண தம்பதியினர் ஓட்டம் பிடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு விநோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சித்தூர் மாவட்டம் கங்கவரம் மிட்ட மீதகுரப் பள்ளியைச் சேர்ந்த 25 வயதான கணேஷ் என்ற இளைஞர், பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்போது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் சித்தூர் பெத்த பஞ்சானியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன், அவருக்கு காதல் மலர்ந்து உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்து உள்ளனர். 

இவர்கள் இருவரும் காதலித்து வந்தது, அவர்கள் பணியாற்றும் அவர்களது அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களுக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது. 

அத்துடன், அவர்கள் இருவரும் பெங்களுரில் பல இடங்களில் காதல் ஜோடிகளாக ஊர் சுற்றி உலா வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, கடந்த 6 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில், இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் கணேஷுக்கு கொரோனா 
அறிகுறி வந்து உள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள மிட்டமீதகுரப் பள்ளிக்கு வந்த கணேஷ், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு, அவர் கொரோனாவிலிருந்து மீண்டார். 

இதனையடுத்து, கணேஷின் வீட்டார் அவருக்கு பெத்தபஞ்சானி மண்டலம் அப்பனபள்ளியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்தனர். இந்த திருமண ஏற்பாட்டிற்கு மறுப்பேதும் சொல்லாத கணேஷ், திருமணத்திற்கும் தன்னை தயார் படுத்தி உள்ளார்.

இந்த திருமண ஏற்பாடுகள் தொடர்பான தகவல்கள், கணேஷின் நண்பர்கள் மூலம் அவரது காதலிக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், பெங்களூருவில் இருந்து அவசரமாக மிட்டமீதகுரப் பள்ளிக்கு வருகை தந்தார். ஆனால், அந்த பெண் வருவதற்கு முன்பே கணேஷிற்கு திருமணம் நடைபெற்று முடிந்து உள்ளது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், “என்னை கடந்த 6 வருடமாக காதலித்து ஊர் சுற்றிவிட்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றிய கணேஷ் மீது கங்கவரம் மற்றும் பெத்தபஞ்சானி போலீசாருக்கு” பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்தார். 

அது மட்டுமில்லாமல், தன்னை காதலித்து ஏமாற்றிய இளைஞனிடம் நியாயம் கேட்க அவரது வீட்டிற்கும் அந்த பெண் சென்று உள்ளார்.

அந்த நேரத்தில் தான், கணேஷின் முதலிரவு ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தது. அப்போது, அங்கு வந்த பாதிக்கப்பட்ட இளம் பெண், வீட்டின் முன்பு வந்து அவரது உறவினர்களிடம் பேசி உள்ளார். ஆனால், கணேசின் உறவினர்கள் அந்த இளம் பெண்ணிடம் வாக்குவாதம் செய்து, கடுமையாக தாக்கியதாகவும் தெரிகிறது. 

அத்துடன், தனது காதலியின் வருகையைச் சற்றும் எதிர்பார்க்காத காதலன் கணேஷ், தங்களைப் பிரித்து விடுவார்களோ என்று பயந்து, புதுமண தம்பதியினர் முதலிரவு நடக்கவிருந்த வீட்டிலிருந்து, அந்த முதலிரவு அறையிலிருந்து ஓட்டம் பிடித்து உள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களுக்கு மட்டுமில்லாமல் இரு வீட்டார் குடும்பத்தாருக்கும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.