பிக் பாஸ் 4 நேற்று ஐம்பதாவது நாளை கடந்து இருக்கிறது. பாதி கிணறு தாண்டிய மகிழ்ச்சியில் தான் தற்போது போட்டியாளர்கள் இருக்கிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டில் இருந்து சுசித்ரா வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்று உள்ளது.

இன்றைய முதல் ப்ரோமோ வீடியோவில், போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு பிடிக்காத இரண்டு பேரை நாமினேட் செய்து இருக்கிறார்கள். இறுதியில் நாமினேஷன் லிஸ்டை காரணத்துடன் பிக் பாஸ் அறிவித்தார். Safe கேம் ஆடுறாங்க, ரூல்ஸ் பிரேக் பன்றாங்க, ராஜா வீட்டு கண்ணுகுட்டியா எந்த வேலையையும் பண்ணாம இருக்குறாரு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி நாமினேட் ஆன நபர்கள் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா என பிக் பாஸ் கூறினார். 

இதில் இருந்து வெளியே போகப்போகும் போட்டியாளர் யார் என்பது இந்த வார இறுதியில் தான் தெரியவரும். இந்த நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றபோது ஆரி கண்பெஷன் ரூம் சென்ற போது சனம், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டவர்கள் பேசிய வார்த்தைகளை கேட்டு ஆரி கடும் கோபம் அடைந்தார். ஒரு நிமிடத்தில் வந்து விடுவார் என சனம் கூறியதை கேட்டு நீங்க யாருமே பேசுவதில்லையா. Criticize பண்ணாதீங்க என கோபத்துடன் கூறிவிட்டு உள்ளே செல்கிறார். 

மேலும் தான் கடும் கோபத்தில் இருப்பதாக பிக் பாஸிடமும் அவர் தெரிவிக்கிறார். மேலும் நாமினேஷன் லிஸ்ட் அறிவிக்கப்பட்ட பிறகு அனைவர் முன்பும் வந்த ஆரி ஒரே ஒரு விஷயம் சொல்லிக்குறேன் என சொல்லி எதோ கூற தொடங்குவது ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டிருந்தது. 

தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், நாமினேஷன் Topple எனும் முறையை அறிமுகப்படுத்துகிறார் பிக்பாஸ். சனத்திற்கு விட்டுக்கொடுக்க தயாரா இருக்கியா என்று ஆரி கேட்க, நான் விட்டெல்லாம் குடுக்க முடியாது என்று வெளிப்படையாக கூறுகிறார் நிஷா. திடீரென கோபப்பட்ட ரமேஷ், நாற்காலியில் இருந்து எழுந்து கோபமாக நடப்பது போல் காட்டப்பட்டுள்ளது. மேலும் சனம் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைக்கிறார்.