காமபோதை.. பெண்ணை பலாத்காரம் செய்து கொடூர கொலை! சடலத்துடன் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்ததால் கடும் அதிர்ச்சி..

காமபோதை தலைக்கேறிய நிலையில், மனைவியை பிரிந்து தனிமையில் வசித்து வந்த இளைஞன் கூலி வேலைக்கு சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, துடிக்கத் துடிக்க கொன்ற கொடூரம் சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா கோனாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான திருமணம் ஆன இளம் பெண் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு தோட்டத்தில் நிலக்கடலை அறுவடை செய்துகொண்டு இருந்தார்.

அப்போது, ஆந்திராவை சேர்ந்த 28 வயதான சங்கரப்பா என்ற இளைஞர், திருமணமான நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை பிரிந்து சென்றதும், அதன் பிறகு வேலைக்காக அவர் கர்நாடக மாநிலம் கோனாப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.

இந்ந நிலையில், அந்த பகுதியில் கூலி வேலைக்கு சென்ற சங்கரப்பா, அங்கிருந்த ஒரு விளை நிலத்தில் நிலக்கடலை செடிகளை அறுவடை செய்து கொண்டிருந்த பெண்ணை பார்த்து உள்ளார். இதனால், அவருக்கு காம போதை தலைக்கு ஏறி உள்ளது. இதனால், அந்த பெண் மீது சபலப்பட்ட சங்கரப்பா, அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண், அவரை கடுமையாக திட்டியதோடு கண்டித்து உள்ளார். ஆனாலும், அந்த நபர் அங்கிருந்து செல்லாமல், அங்கேயே நின்று மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகத் தெரிகிறது. இதனால், சங்கரப்பாவை அவர் தாக்கி உள்ளார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த சங்கரப்பா, அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். ஆனாலும், அந்த பெண் இவரிடம் இருந்து கடைசி வரை கடுமையாகப் போராடியதாகத் தெரிகிறது. ஆனாலும், அனைத்தையும் தாண்டி, சங்கரப்பா, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து, இந்த பெண்ணை இப்படியே விட்டால் தனது உயிருக்கு ஆபத்து என்று எண்ணிய சங்கரப்பா, அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதில் அந்த பெண் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

குறிப்பாக, மீண்டும் காமம் தலைக்கேறிய நிலையில் இறந்து போன பெண்ணை மீண்டும் மீண்டும் பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகே அவர் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளார். 

இதனையடுத்து, அந்த பெண் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணை தேடி குறிப்பிட்ட அந்த 
தோட்டத்திற்குச் சென்று பார்த்து உள்ளனர். அப்போது, அந்த பகுதியில், அரை நிர்வாண நிலையில் அந்த பெண் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், அங்கேயே கதறி அழுதனர்.

இது குறித்து, அங்குள்ள பட்டலஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள சிந்தாமணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் படி, பிரேதப் பரிசோதனையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், அங்குள்ள கோனாப்பூர் கிராமத்தில் வெளியிலிருந்து வந்து தங்கி வேலை பார்த்து வந்த இளைஞன் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து, அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். 

இதனையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அத்துடன், கொலை செய்த பிறகும், அந்த பெண்ணின் சடலத்துடன் அவர் பாலியல் உறவு கொண்டதையும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.