60 வயது பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, பெண்ணின் தனிப்பட்ட பாகத்தில் மிளகாய் பொடியைத் தோய்த்து உச்சக்கட்டமாகக் கொடுமை 
செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் மிக கொடூரமான பலாத்காரம் சம்பவங்கள் நடைபெறும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான், தற்போதும் மிக கொடூரமான ஒரு பாலியல் பலாத்கார 
சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள கப்ராய் கிராமத்தில் வசிக்கும் சேவா லால் மற்றும் பாரத் குஷ்வாஹா ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் 
வசித்து வருகின்றனர். 

அப்போது இவர்களது பக்கத்து வீட்டில் 60 வயதான பெண் ஒருவர் யாரும் ஆதரவும் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்து உள்ளார். 

இதனால், யாரும் இல்லாத அந்த வயதான பெண்ணின் வீட்டினையும், அவருக்குச் சொந்தமான நிலத்தினையும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அவர்கள் இருவரும்  அபகரிக்கத் திட்டம் போட்டு உள்ளனர்.  

அதன் படி, பக்கத்து வீட்டில் உள்ள அந்த 60 வயதான பெண்ணிடம் சென்று, “வீட்டை விட்டு காலி செய்து, நிலத்தையும் தங்களிடம் கொடுத்து விட்டு இங்கிருந்து வெளியேற வேண்டும்” என்றும், பல முறை மிரட்டி உள்ளனர்.

இதனால், இதனைக் கேட்டு சற்று பயந்து போன அந்த பெண், அவர்களிடம் விடாமல் எதிர்த்துப் பேசி சண்டைக்குச் சென்று உள்ளார். அத்துடன், தனது வீட்டை காலி செய்யாமல் சற்று துணிச்சலாக அங்கேயே இருந்து வந்திருக்கிறார்.

அதனால் அந்த சேவா லால் மற்றும் பாரத் குஷ்வாஹா ஆகிய இருவரும் கோபம் அடைந்து தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, வீட்டின் அருகில் வசித்து வந்த 60 வயதான பெண்ணை கடந்த வாரம் 24 ஆம் தேதி சனிக் கிழமை இரவு அந்த  பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள வயலுக்குத் தூக்கிச் சென்று உள்ளனர்.

அதன் பிறகு, அந்த 60 வயது பெண்ணை அந்த 4 பேரும் சேர்ந்து மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அந்த 4 பேரிடம் இருந்து மிக கடுமையாகப் போராடி உள்ளார். ஆனாலும், வெறிபிடித்த மிருகம் போல் செயல்பட்ட அந்த 4 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, பலாத்காரம் தொடர்பான தடயங்களை அழிக்கும் நோக்கத்தோடு, கொடூரத்தின் உச்சமாக அந்த பெண்ணின் தனிப்பட்ட பாகத்தில் மிளகாய் பொடியைத் தோய்த்து மிக பயங்கரமான கொடுமை செய்துள்ளனர்.

இதனால், வலியால் துடித்த அந்த பெண் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர்.

இதனால், அந்த பெண், அந்த வயலில் மயக்க நிலையில் கிடந்து உள்ளார்.  இதனையடுத்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெண்ணைத் தேடி  கண்டுபிடித்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக, மருத்துவமனை சார்பில் அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதன் படி, வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் பக்கத்து வீட்டு நபர்களான சேவா லால் மற்றும் பாரத் குஷ்வாஹா ஆகிய இருவருயும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

அத்துடன், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.