இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவர் மறைந்தாலும், இந்த மண்ணை விட்டு மறையாமல் இருக்கும் அவர் இயற்றிய மிகச் சிறந்த பொன்மொழிகளை அவரது நினைவு நாளான் இன்று ஒரு முறை நினைவு கூறலாம்.

- “வாய்ப்புக்காக காத்திருக்காதே.. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்!”

- “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.. ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!”

- “தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இன்னும் இழிவானது”

- “பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது!”

- “ அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது”

- “எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்”

- “நேற்றைய பொழுதும் நிஜமில்லை.. நாளைய பொழுதும் நிச்சயமில்லை.. இன்றைக்கு மட்டுமே நம் கையில்”

- “செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒரு போதும் உதவி செய்யாது”

- “எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது!”

- “எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்”

- “முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது நிச்சயம் உதவுவார்கள்”

- “உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது!”

- “அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல, விடாமுயற்சியினால் ஆனது”

- “சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்”

- “சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்”

- “ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்”

- “மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல”

- “ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது”

- “வெற்றிக்குத் தான் எல்லைகள் உண்டு. முயற்சிகளுக்கு எல்லைகள் இல்லை. அதனால், முயற்சித்துக்கொண்டே இரு”

- கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்று விடும். கண்ணை திறந்து பார், அதனை வென்று விடலாம்!”