“மருமகள் என்றும் பார்க்காமல், மாமனார் எனக்கு பாலியல் தொல்லை தருவதாகவும், அதற்கு என் கணவனும் உடந்தையாக இருப்பதாகவும்” பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலங்களில் நடைபெறும் இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுச்சாட்டுக்கள் இந்த முறை தமிழகத்தில் அதுவும் சேலத்தில் அரங்கேறி இருக்கிறது.

சேலத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவருக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு, கணவன் - மனைவி இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இப்படியான சூழ்நிலையில், சமீப காலமாகக் கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்து உள்ளது.
 
இந்த நிலையில், சந்திரசேகரனின் மனைவிக்கு அவரது மாமனார், தனது மருமகள் என்று கூட பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இது தொடர்பான தனது கணவரிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவரது கணவரோ இதனை  கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், “எனது கணவரின் தந்தை பிச்சை முத்து, எனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக” சந்திரசேகரனின் மனைவி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில், “மாமனாரின் இந்த பாலியல் செயலுக்கு, என் கணவரும்  உறுதுணையாக இருப்பதாகவும், இதனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், பாதிக்கப்பட்ட பெண், தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அந்த புகார் மனுவில், “எனது கணவருடன் சேர்ந்து வாழ நான்  விரும்பினால், என் கணவர் வீட்டிற்கு 2 லட்சம் ரூபாய் பணமும், 2 பவுன் தங்க நகைகளும் நான் மீண்டும் வரதட்சணையாகத் தர வேண்டும் என்று, அவர்கள் என்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும்” அந்த புகார் மனுவில் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “என் மாமனாரின் பாலியல் தொல்லை குறித்தும், வரதட்சணை கொடுமைகள் குறித்தும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இது வரை போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், என் கணவர், மாமனார் மீது கடும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், பாதிக்கப்பட்ட இளம் பெண் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

இந்த செய்தி, அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.