நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 10 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் போட்டியிட திமுக திட்டம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 10 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் போட்டியிட திமுக திட்டம்! - Daily news

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, இடப்பங்கீடு குறித்த ஆலோசனைகளை தீவிரப்படுத்தியுள்ளன. மேலும் இதனிடையே, திமுக மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு 10 முதல் 12 சதவீத இடங்களை ஒதுக்க திமுக முடிவு செய்து என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 22 மாநகராட்சிகளில் திமுக கைப்பற்ற வேண்டும் என முனைப்பு காட்டி வரும் நிலையில் திமுகவும் தாங்களும் பலமுள்ள எதிர்க்கட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் பெரும்பாலான மாநகராட்சி நகராட்சிகளில் கைப்பற்றி திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க அதிமுகவும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் மாநகராட்சி வார்டுகளில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெற முயன்று வருகின்றன.

அதனைத்தொடர்ந்து அதிமுக கூட்டணி உடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் அதிமுக உடனான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி முடிவடைந்து உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் எனவும், ஒவ்வொரு வீடாக பாஜகவையும் தாமரையும் கொண்டு செல்ல தனித்துப் போட்டியிடுவது ஒரு வாய்ப்பு என்றும் தெரிவித்தார். சிறிது நேரத்தில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தேசிய அளவில் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Leave a Comment