சொத்தில் பங்கு கேட்ட அண்ணனை காலால் மிதித்து கொன்ற தம்பி!

சொத்தில் பங்கு கேட்ட அண்ணனை காலால் மிதித்து கொன்ற தம்பி! - Daily news

புதுக்கோட்டையில் சொத்து தகராறில் அண்ணனை காலால் மிதித்து கொலை செய்திருக்கிறார் தம்பி. அவரை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் அடுத்த ஒடுக்கூரில் பழனிச்சாமி என்கிறவருக்கு 4 தம்பிகள், இரண்டு தங்கைகள் உள்ளனர். அண்ணன் தம்பிகளுக்கு இடையே சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யாமல்  பல காலமாக இருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சொத்தை பிரித்து தரச்சொல்லி பழனிச்சாமியின் நான்காவது தம்பி சிவசாமி அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார். மேலும் நேற்று இரவும் அப்பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் அருகில் வயல்வெளியில் சொத்துப்  பாகப்பிரிவினை தொடர்பாக பழனிச்சாமிக்கு, சிவசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இந்த வாக்குவாதம் முற்றி போய் சிவசாமி அண்ணன் பழனிச்சாமியை கீழே தள்ளி தலையை தரையில் மோதி இருக்கிறார். பின்னர் காலால்  போட்டு மிதித்து இருக்கிறார். இதில் படுகாயமடைந்த பழனிச்சாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

அதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அறிந்த கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சொத்து தகராறு கூட பிறந்த அண்ணனையே காலால் மிதித்து கொன்ற தம்பியின் செயல் ஒடுக்கூர் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

Leave a Comment