கபடி வீராங்கனை பானுமதி தற்கொலைக்கு தமிழ்நாடு ஒலிம்பிக்ஸ் சங்கம் விடுத்த கோரிக்கைகள்!

கபடி வீராங்கனை பானுமதி தற்கொலைக்கு தமிழ்நாடு ஒலிம்பிக்ஸ் சங்கம் விடுத்த கோரிக்கைகள்! - Daily news


பிரபல தமிழக கபடி வீராங்கனை வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதாக காரணம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுவருகிறது.

சென்னையை அடுத்த மாங்காட்டில் வசித்து வரும் பிரபல கபடி வீராங்கனை பானுமதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வயதான பானுமதியின் தந்தை காய்கறி விற்பனை செய்து வருபவர். 
இளங்கலை படிப்பை முடித்துள்ள நிலையில் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார். படிக்கும் போதே கபடி மீது இருந்த ஆர்வத்தால் பல்வேறு போட்டிகளில் விளையாடினார். இதன் மூலம் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் முன்னேறி, அசத்தியவர் தான் பானுமதி. 

கபடி வீராங்கனையான பானுமதி வேலை கிடைக்காததால் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் பானுமதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது பெற்றோர், பானுமதியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பானுமதி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் பானுமதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பானுமதியின் செல்போனை மீட்ட போலீசார் அவர் கடைசியாக யாருக்கு பேசினார், யாருடன் தொடர்பு கொண்டார். இல்லை காதல் விவகாரமா என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

அதனைத்தொடர்ந்து விசாரித்ததில், குடும்பத்தின் கஷ்டம் காரணமாக கபடியில் சாதித்தால் அவரது வாழ்க்கை மாறும், அரசு வேலை கிடைக்கும் என்று பானுமதி கடுமையாக முயற்சி செய்திருக்கிறார். ஆனால் பானுமதி எதிர்பார்த்த அரசு வேலை மட்டும் கிடைக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பானுமதி, குடும்பத்திற்கு உதவி செய்ய முடியவில்லை என்ற துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கபடி வீராங்கனை பானுமதி தற்கொலையை அடுத்து தமிழ்நாடு ஒலிம்பிக்ஸ் சங்கம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் மூலம் கோடி கோடியாக பணம் கொட்டும் நிலையில் மற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஒரு அரசு வேலை கூட கிடைப்பதில்லை. இதனால் பல்வேறு விளையாட்டு வீரர்கள் மீது அக்கறை செலுத்தி, அவர்களுக்கு அரசு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று பல்வேறு விளையாட்டு நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்துக்காகவும் இந்தியாவுக்காகவும் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு எந்த வேலையும் கிடைக்காத விரக்தியில் தான் இருந்து வருகிறார்கள். இந்த பிரச்னைக்கு என்ன தான் தீர்வு என்பது குறித்து, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் பேசினோம். ஹரியானா,பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு அந்த மாநிலங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

ஆனால் தமிழ்நாட்டில் கடந்த இருபது வருடங்களாக நமது மாநிலத்தில் விளையாட்டு வீரர்களுக்குச் சரியான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தேசிய அளவில் இந்திய அணிக்கு விளையாடி வெற்றி பெற்ற நமது மாநில வீரர்கள், பிற பகுதிகளில் உள்ள வடக்கு இரயில்வே, வடகிழக்கு இரயில்வே, கிழக்கு இரயில்வே போன்ற இடங்களில் வேலைக்கு முயற்சி செய்கிறார்கள். 

இந்திய வாலிபால் அணியில் ஏழு ஆண்டுகள் விளையாடியவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜெயவேல். இவர் கடந்த 2002-ம் ஆண்டு வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் தற்போது பானுமதி. அன்று முதல் இந்த அவலம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்று தெரிவித்தனர். குறைந்தது  600 விளையாட்டுக்கு வீரர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மனு மூலமாக வேண்டுகோள்விடுத்துளோம் என்று தெரிவித்தனர்.

மேலும் இனிவரும் காலங்களில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் என்றும் அதற்கான அனைத்து  நடவடிக்கையையும் தமிழ்நாடு ஒலிம்பிக்ஸ் சங்கம் எடுக்கும் ஆனால் நமது  விளையாட்டு வீரர்கள் காலத்தில் எப்படி தன்னம்பிக்கையுடன் சாதனைப்படைத்து  விளையாடுகிறார்களோ அதுபோலவே தங்கள் வாழ்வையும்  எதிர்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

வேலை கிடைக்காததால் மரணித்த கடைசி  வீராங்கனை பானுமதியாக  இருக்கட்டும். வீரர்கள் மனம்தளரா வேண்டாம் நமது வேற்றார்களுக்காக தமிழ்நாடு ஒலிம்பிக்ஸ் சங்கம் தொடர்ந்து வளைத்து வருகிறது. பல ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழும் என தொடர்ந்து உறுதி அளிக்கிறோம். நாம்  இணைந்து புதிய வரலாறு படைத்தது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என தமிழ்நாடு ஒலிம்பிக்ஸ் சங்கம் மனுவில் தெரிவித்துள்ளது.

Leave a Comment