தலையை அறுத்து கொலை; என்கவுண்டர் செய்த போலீஸ்

தலையை அறுத்து கொலை; என்கவுண்டர் செய்த போலீஸ் - Daily news

சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் வீரா என்பவரை ஒரு கும்பல் சுற்றிவளைத்து அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து, தலையை தனியாக எடுத்துச் சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தலையில்லாத வீராவின் உடலை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


வீராவை கொன்ற குற்றவாளிகளையும் மற்றும் வீராவின் தலையையும் காவல்துறையினர் தேடி வந்தனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படையையும் அமைத்தனர். இந்நிலையில் இந்த கொடூர செயலை செய்த  குற்றவாளிகள் 7 பேரும் புதுப்பேட்டை மலட்டாறு  பகுதியில் தங்கியிருந்தது தெரிய வந்தது. காவல்துறையின் தனிப்படை குற்றவாளிகளை சுற்றிவளைத்து, கைது செய்ய முயற்சிக்கும் போது, குற்றவாளிகளில் கிருஷ்ணா என்பவர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.


இதனால் கிருஷ்ணா என்பவரை காவல்துறை என்கவுண்டர் செய்துள்ளது. மேலும் வீராவிற்கும், கிருஷ்ணாவிற்கும்  முன்பகை இருந்ததால், கிருஷ்ணா வீராவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. முன்பகை காரணமாக இவ்வாறு கொடூர கொலை செய்த சம்பவமும், என்கவுண்டர் சம்பவமும் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Comment