ஜேப்பியாருக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சி.. கைது செய்யப்பட்ட நபர்கள் யார்?

ஜேப்பியாருக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சி.. கைது செய்யப்பட்ட நபர்கள் யார்? - Daily news

ஜேப்பியாருக்கு சொந்தமாக ராயப்பேட்டையில் உள்ள நிலம் ஒன்றை அடகு வைத்து மோசடி செய்ய முயன்றதாக ஜேப்பியாரின் செயலாளர் ஜோஸ்,  ஜஸ்டின்  உள்ளிட்ட 5 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


சென்னை இராயபேட்டை கணபதி தெருவில், 3600 சதுரடி கொண்ட வீட்டை 1985ம் ஆண்டு தனது மனைவி ரெமிபாய் பெயரில் ஜேப்பியார் வாங்கியுள்ளார்.  ஆரம்ப காலங்களில் இந்த வீட்டில் குடும்பம் வசித்து வந்துள்ளனர். 


இந்நிலையில் ரெமிபாய்க்கு சொந்தமான இந்த வீட்டின் கேட்டை கடந்த 2019ம் வருடம் பிப்ரவரி 16ம் தேதி 3 நபர்கள் பூட்டியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதை கவனித்துள்ளனர். இதுகுறித்து பூட்டு போட்ட மூவரிடம் ரெமிபாயின் சட்ட ஆலோசகர் கண்ணன் பேசியபோது, ‘ இந்த இடம் சென்னை நந்தனம் சிஐடி நகரை சேர்ந்த தனியார் பைனான்சியரான முரளிதரன் என்பவர்க்கு சொந்தமானது என்று கூறிய அவர்கள் முரளிதரன் உத்தரவின்பேரில் பூட்டு போட்டதாகவும் கூறியுள்ளனர். 


மேலும் ஜேப்பியார் செயலாளராக பணியாற்றிய ஜோஸிடம், ரெமிபாய் கேட்டபோது, ஜேப்பியார்  அப்பொழுது அவசர தேவைக்காக ரூபாய் 5 கோடி தேவைப்பட்டதால் மனைவிக்கு சொந்தமான இராயபேட்டை வீட்டின் மீது கடன்  பெற்றதாக சகோதரர்கள் ஜோஸ் மற்றும் ஜஸ்டின் கூறியுள்ளனர். 

இதில் வில்லங்கம் உள்ளது என தெரிய வந்தபோது ரெமிபாயின் சட்ட ஆலோசகர் கண்ணன் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால்  சிஎஸ்ஆர் மட்டும் போட்டு கொடுத்த செம்மஞ்சேரி ஆய்வாளர் விஜயகுமார் மேற்கொண்டு நடவடிக்கைய எடுக்கவில்லை என்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, செம்மஞ்சேரி ஆய்வாளரை விசாரித்து வழக்குபதிவு செய்யும்படி ஆணை பிறப்பித்துள்ளார்.  ஆனால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளார் ஆய்வாளர் விஜயகுமார். 

பின்னர் சிசிபியில் ரெமிபாய் தரப்பில் முறையான ஆவணங்களை சமர்பித்ததால் ஜேப்பியாரின் செயலாளர் ஜோஸ், அவரது அண்ணன் ஜஸ்டின், பைனான்சியர் முரளிதரன், அவருடைய உதவியாளர் பிரான்சிஸ் (எ) பினு பிரான்சிஸ் உள்ளிட்ட ஐந்து பேர் இணைந்து போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க திட்டம்தீட்டி மோசடியில் ஈடுபட்டடுள்ளனர். பின்னர் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

காவல் துறைவிசாரணையில் சகோதரர்கள் ஜோஷ் மற்றும் ஜெஸ்டின். இருவரும் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் கடியப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த 2004ம் ஆண்டு வேலை தேடி சென்னை வந்து ஜேப்பியார் அவர்களை சந்தித்துள்ளனர். 

இருவரின் குடும்ப சூழலை எடுத்து கூறியதும் ஜேப்பியார் சகோதர்கள் இருவரையும் தனது கல்லூரியில் படிக்கவைத்து அவருடை கல்லூரியிலேயே வேலை வழங்கியுள்ளார். அண்ணன் ஜோஸ் ஜேப்பியாரின் செயலாளராக பணியமர்த்தியுள்ளார். 

ஜேப்பியாரின் செயலாளராக பணியாற்றி வந்த ஜோஸ் ஜேப்பியார் தற்பொழுது உயிருடன் இல்லை என்பதாலும்  ரெமிபாய்க்கு தெரியாமல் அவருக்கு சொந்தமான வீட்டின் பத்திரத்தை வைத்துக்கொண்டு ஜேப்பியார் அவர்கள் ரூபாய் 5 கோடி கூறி தனியார் பைனான்சியர் முரளிதரனுடன் இணைந்து திட்டமிட்டு ஐந்து பேரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக  தெரிய வந்ததுள்ளது.

 

Leave a Comment