திமுக வட்டச் செயலாளர் கொலையில் பகீர் வாக்குமூலம்!

திமுக வட்டச் செயலாளர் கொலையில் பகீர் வாக்குமூலம்! - Daily news

திமுக வட்டச் செயலாளர் கொலையில்  காரணம் எல்லாம் தெரியாது, வெட்டச் சொன்னார்கள் வெட்டினேன், என வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாயுள்ளது.

crime

பிப்ரவரி 3-ம் தேதி அதிகாலை காரில் தப்பிச் சென்ற கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர். இதுவரை செல்வம் கொலையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வியாசர் பாடியை சேர்ந்த அருண் என்பவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த அருணை 5 நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து மடிப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக வட்டச் செயலாளர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து  விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் தனக்கு தெரியாது என்றும் வெட்ட சொன்னார்கள் அதனால் வெட்டினேன் என்றும் அந்த நபர் விசாரணையில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. கொரோனா காலம் தொட்டு மழை வெள்ளம் வரை அரசு செயல்பட்ட விதம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது திமுகவுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் கூலிப்படை கொலைகள், பழிவாங்கும் கொலைகள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. எதிர்க்கட்சிகள் சட்டம்-ஒழுங்கை மேற்கோள் காட்டி தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இது ஒரு கட்டத்தில் தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது

மேலும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை நடத்தி குற்றப்பின்னணி உள்ளவர்களை கைது செய்ததுடன் மற்றும் அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு பெருமளவில்  கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் பெரிய அளவில் பலன் இல்லை என்பது தற்போது அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. அதாவது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பழிவாங்கும் கொலைகள் அரங்கேறியுள்ளது. அதில் ஒன்றுதான் பிப்ரவரி 2-ஆம் தேதி  சென்னை  மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த அதிமுக வட்ட செயலாளர் செல்வம் கொலைச் சம்பவம் ஆகும்.

இந்நிலையில் பிப்ரவரி 2-ம் தேதி மடிப்பாக்கம் ராஜாஜி பிரதான சாலையில்  தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தது. பின்னர் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கியதைக் கண்டு அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானது. பின்னர் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக வட்டச்செயலாளர் செல்வம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 188-வது வார்டில் தனது மனைவியை போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவந்த நிலையில் அவர் கொல்லப்பட்டார். மறுபுறம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.

அதன் பின் கொலை நடந்த மறுதினம் பிப்ரவரி 3ஆம் தேதி அதிகாலை காரில் தப்பிச் சென்ற கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர். இதுவரை செல்வம் கொலையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வியாசர் பாடியை சேர்ந்த அருண் என்பவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த அருணை 5 நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து மடிப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கிஷோர் என்பவர் தன்னை அழைத்து வந்ததாகவும், அதனால் செல்வத்தை கொலை செய்ததாகவும், ஆனால் கொலைக்கான காரணம் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். இவரிடமிருந்து கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் மறைத்து வைக்கப்பட்டுள்ள, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள் பறிமுதல் செய்யவுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள கூலிப்படை தலைவனான முருகேசனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த விக்னேஷ், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த புவனேஷ்வர், வியாசர்பாடியைச் சேர்ந்த சஞ்சய், அரக்கோணத்தைச் சேர்ந்த விக்னேஷ், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் குமார் ஆகிய 5 பேரை கடந்த 3 ம் தேதி கைது செய்த நிலையில், வியாசர்பாடியைச் சேர்ந்த அருண் என்பவர் எழும்பூர்நீதிமன்றத்தில் சரணடைந்தார் என்பது குறிப்பிடதக்கது. 

Leave a Comment