கோவிட் - 19 கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை, இந்திய அளவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. நேற்று ஒருநாளில் மட்டும் இந்தியாவில் 24,000 என்று அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 4,000 என்றிருந்த நிலையில் தற்போது 3,000 என்ற நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும், இந்த நிலை இன்னும் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பதைப் பொறுத்துதான், வருங்காலத்தின் நிலை அமையும் எனக்கூறியிருந்தனர் மருத்துவர்கள்.

தமிழகத்தில்கூட எண்ணிக்கை குறைவுக்கான வாய்ப்புகள் இருப்பது தெரிகிறது, ஆனால் இந்திய அளவில் இப்படியான சூழல் இருப்பதாக தெரியவில்லை என்கிறது ஓர் ஆய்வு. 

Massachusetts institute of technology என்ற நிறுவனம் நடத்திய அந்த ஆய்வில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் நாளொன்றுக்கு 2.87 லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என்று தெரியவந்துள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க இந்தியா உட்பட உலக நாடுகள் போராடி வரும் நிலையில் இந்த ஆய்வு முடிவு இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை தடுப்பூசி அதற்குள் கிடைத்தால், இந்த நிலை மாறலாம் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்றைய தேதிக்கு, ஒரு நாள் பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாவது வாடிக்கையாகி இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, உலகளவில் மொத்தம் 7 லட்சத்து 69 ஆயிரத்து 150 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 25,571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்த உயிரிழப்பு 21 ஆயிரத்து 144 என்றாகியுள்ளது. உலகளவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் 21 ஆயிரம் மரணங்கள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவை பொறுத்தவரை, இதுவரை 1.34 லட்சம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், 60,000 என நோயாளிகள் எண்ணிக்கை அங்கே அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

  1. இந்த இறப்பு எண்ணிக்கைகளை, நோய்த்தொற்று ஆராய்ச்சியாளர்களான ஹசீர் ரஹ் மேந்த் தாத், டி. ஒய்.லிம் மற்றும் ஜான்ஸ் ஜெர்மன் 2011 - ம் ஆண்டேவும் கணித்திருந்தது, இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். தங்களின் அந்த ஆய்வில், அவர்கள் சொல்லியிருந்தது, `உலக மக்கள் தொகை அடிப்படையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 முதல் 60 கோடிக்குள் இருக்கும்' என்பது.
  2. இதேபோல ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி உலகம் முழுவதும் மொத்தம் 8.24 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். உயிரிழப்பு 4,54,610ஆக இருந்தது என்று Johns Hopkins University தரவுகள் சொன்னது. 

இந்த இரண்டுமே, இப்போதைய நிலவரத்தோடு ஒப்பிட்டுப் போவது குறிப்பிடத்தக்க விஷயம்.

அந்தவகையில் இப்போது செய்யப்பட்டுள்ள Massachusetts institute of technology ஆய்வும் சாத்தியபட வாய்ப்புள்ளது எனக்கூறி அஞ்சுகிறார்கள் மக்கள். தற்போது கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் 12.1 கோடியாக இருக்கிறது.

ஆய்வறிக்கையில், உலக நாடுகளிலேயே இந்தியாதான் மிக மோசமான பாதிப்பை சந்திக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் நாளொன்றுக்கு 95 ஆயிரம் பேரும், தென்னாப்பிரிக்காவில் 21ஆயிரம் பேரும், ஈரானில் 17 ஆயிரம் பேரும், இந்தோனேசியாவில் 13 ஆயிரம் பேரும் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறியிருக்கின்றனர் அந்த ஆய்வினர். இப்படி, 84 நாடுகளின் கொரோனா பாதிப்பு விவரங்களை ஆய்வு செய்து, முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடுகளிலும் செய்யப்படும் பரிசோதனை எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இவையாவும் கணிக்கப்பட்டுள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால் இந்தியாவில் 2021 ம் ஆண்டு, மார்ச் - மே மாத காலகட்டங்களில் 84 நாடுகளில் கொரோனா பாதிப்பு 155 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக்கூறி அதிர வைத்துள்ளனர் ஆய்வாளர்கள்.

- ஜெ.நிவேதா