தனக்கே உரித்தான ஸ்டைலில் தொடர்ந்து அட்டகாசமான என்டர்டெய்னிங் படங்களை கொடுத்து ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனர்களில் ஒருவராகவும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் திகழும் இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகும் கஸ்டடி திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கஸ்டடி திரைப்படத்தில், நாக சைதன்யாவுடன் இணைந்து பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

ஒளிப்பதிவாளர் SR.கதிர் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்யும் கஸ்டடி படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கின்றனர். கஸ்டடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு (2023) கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படம் மே 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்டகாசமான அந்த அறிவிப்பு இதோ…