பரியேரும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயகுனர் மாரி செல்வராஜ் இயக்கி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. சமூக் நீதியை பேசும் படமாக உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் வைகை புயல் வடிவேலு, பகத் பாசில், விஜய குமார், லால் உள்ளிட்டோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை தயாரிக்க இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மாமன்னன் படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக மாமன்னன் படத்தின் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மக்களின் வலியை பேசி கச்சிதமான சமூக திரைப்படமாக உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் மாமன்னன் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்தும் வரும் ஜூன் 29 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் மாமன்னன் திரைப்படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் உலகநாயகன் கமல் ஹாசனுடைய தேவர் மகன் படத்திற்கும் மாமன்னன் படத்திற்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்து பேசுகையில்,

"தேவர் மகன் எல்லோருக்கும் பிடிச்ச ஒரு படம். இப்பவும் அந்த படத்தை பற்றி பேசுறோம். அந்த காலக்கட்டத்தில் அந்த படத்தின் பாடல்கள், காட்சிகள், நடிகர்களின் நடிப்பு, சிவாஜி சார் நடிப்பு குறிப்பா வடிவேலு அண்ணா நடிப்பு.. அந்த படத்தை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை..

அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் சம்பதமே இல்லை.. தேவர் மகன் ல இசக்கி னு ஒரு கதாபாத்திரம் பண்ணார் அந்த கதாபாத்திரத்தின் நீட்சி தான் இது. அதோட கதை வேற.. கதைக்களம் வேற.. அந்த படம் சாதி எதிர்ப்பு படமோ. இல்லை சாதி பேசுற படமோ இல்ல.. அது ஒரு பங்காளி சண்டை படம். அது ஒரு குடும்பத்துக்குள்ள நடக்குற கதை. ஆனா இது மொத்தமா சமூக நீதி பேசுற படம். மாரி செல்வராஜ் படம்.மாரி செல்வராஜ் சார் மேடையில சொன்னது இசக்கி கதாபாத்திரம் இப்போ இருந்தா எப்படி இருக்கும்.. அப்படிங்குறத தவிர அந்த கதைக்கும் இந்த கதைக்கும் சம்பதமே இல்லை..என்றார் உதயநிதி ஸ்டாலின்

மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாமன்னன் படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு நேர்காணல் இதோ..