தளபதி விஜயின் திரை பயணத்திலேயே 500 கோடியை கடந்த முதல் படமாக லியோ திரைப்படம் சாதனை படைத்திருக்கிறது. ரிலீசான 12 நாட்களில் தளபதி விஜயின் லியோ திரைப்படம் தற்போது 540 கோடிகளுக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்திருக்கிறது. இதுவரை தளபதி விஜயின் திரைப்படங்களிலேயே எந்த படங்களுக்கும் இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட ரிலீஸ் திட்டங்களை வகுத்த லியோ பட குழுவினர் அதை மிகச் சரியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தனர். அந்த வகையில் ரிலீசான முதல் நாளிலேயே இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிகபட்ச வசூல் செய்த படமாக லியோ திரைப்படம் 148.75 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை செய்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் வியக்க வைத்தது. அதைத் தொடர்ந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் கொண்டாடப்பட்ட லியோ திரைப்படம் முதல் வாரத்தில் 461 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவிலேயே முதல் வாரத்தில் அதிகபட்ச வசூல் செய்த படமாக மற்றொரு வரலாற்று சாதனையை படைத்தது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணி இணைந்து இருப்பதால் ஆரம்பம் முதலே லியோ திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருந்தன. குறிப்பாக கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் இண்டஸ்ட்ரி ஹிட்டாக இமாலய வெற்றி பெற்றதால் லியோ திரைப்படம் அதைத் தாண்டிய பெரிய வெற்றி பெறும் என்றும், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் LCU யுனிவர்சில் இடம் பெறும் பட்சத்தில் அது ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகமாக இருக்கும் என்றும், மாஸ்டர் மாதிரி 50-50 இல்லாமல் 100% லோகேஷ் படமாக வந்தால் அது படத்திற்கு இன்னும் பெரிய பூஸ்டாக இருக்கும் என்றும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த லியோ திரைப்படம் தற்போது மெகா பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது.

இந்த வெற்றியின் கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் லியோ பட குழுவினர் பிரம்மாண்டமான வெற்றி விழாக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த பிரம்மாண்டமான லியோ பட இசை வெளியீட்டு விழா நேற்று விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தளபதி விஜயுடன் இணைந்து திரிஷா கதாநாயகியாக நடிக்க, சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் என்ற லியோ திரைப்படத்தில் திரைக்கதை வசனங்களில் இயக்குனர் ரத்னகுமார், இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். மிக வலிமையான தொழில்நுட்ப குழுவாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பாளர் ஃபிலோமின் ராஜ் ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவு மாஸ்டர்கள் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் கலை இயக்குனர் சதீஷ்குமார் ஆகியோருடன் ராக்ஸ்டார் அனிருத் ஆகியோர் இந்த லியோ திரைப்படத்தை டெக்னிக்கலாக மற்றொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். இப்படியாக ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்பால் தற்போது 12 நாட்களில் 540 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருக்கும் லியோ திரைப்படத்தின் கலெக்சன் ரிப்போர்ட் குறித்த அறிவிப்பு இதோ…