"ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்"- "பிரேமம்" இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்ட திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு,premam director alphonse puthren about his autism spectrum disorder | Galatta

இந்தியாவில் ரசிகர்களின் மனதை கவர்ந்த திரைப்படங்களில் ஒன்றான பிரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் திடீரென திரையரங்குகளுக்கான திரைப்படங்களை இயக்குவதை நிறுத்துவதாக வெளியிட்டு இருக்கும் அறிக்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப கட்டத்தில் தனது குறும்படங்களின் வாயிலாக வெள்ளித்திரைக்குள் அடி எடுத்து வைத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய முதல் படம் நேரம். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நிவின் பாலி நஸ்ரியா நசீம் மற்றும் பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வெளிவந்த நேரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. 

இதனை தொடர்ந்து இரண்டாவது படமாக மீண்டும் நிவின் பாலி உடன் இணைந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்திய அளவில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த மலையாள திரைப்படமாக மாபெரும் வெற்றி பெற்ற பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்தடுத்த படைப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த அவியல் என்ற ஆந்தாலஜி படத்தில் எலி என்ற எபிசோடை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் அதன் பிறகு 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்த படம் தான் கோல்ட். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து ஃபகத் பாசில் உடன் இணையும் அல்போன்ஸ் புத்திரன் பாட்டு எனும் படத்தை உருவாக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது. தொடர்ந்து தற்போது கிப்ட் எனும் திரைப்படத்தையும் அல்போன்ஸ் புத்திரன் உருவாக்கி வருகிறார் இந்த கிப்ட் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிப்ட் படத்திற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென திரையரங்குகளுக்கான திரைப்படங்களை இயக்குவதை நிறுத்துவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்ட அந்த அறிக்கையை அடுத்த சில நிமிடங்களில் நீக்கி இருக்கிறார். நீக்கப்பட்ட அந்த அறிக்கையில்,

“திரையரங்குகளுக்கான படங்களை இயக்குவதை நிறுத்தப் போகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் எனும் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டிருப்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். ஆனால் ஆல்பம் குறும்படங்கள் மற்றும் OTT தளங்களுக்கான படங்களை தொடர்ந்து எடுப்பேன். ஆனால் நிச்சயமாக சினிமாவை விட்டு நான் போக மாட்டேன் ஏனென்றால் அதை விட்டால் எனக்கு வேறு வழி இல்லை” என குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார். சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடித்த கிப்ட் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ரசிகர்களுக்கு பரிசு கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் நீக்கிய அந்த பதிவு இதோ…
manoj paramahamsa about yohan movie thalapathy vijay gautham menon