ஹன்சிகா மோத்வானியின் ஹாரர் ட்ரீட்டாக வரும் 'கார்டியன்'... கவனத்தை ஈர்க்கும் விறுவிறுப்பான டீசர் இதோ!

ஹன்சிகா மோத்வானியின் கார்டியன் பட டீசர் வெளியீடு,hansika motwani in horror thriller guardian movie teaser out now | Galatta

ஹன்சிகா மோத்வானி நடிப்பில் ஹாரர் திரில்லர் படமாக வெளிவர இருக்கும் கார்டியன் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தனக்கே உரித்தான ஸ்டைலில் எக்கச்சக்கமான படங்களில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் கடைசியாக வெளிவந்த தமிழ் படம் பார்ட்னர். அதைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் ராஜேஷ்.M இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகை ஹன்சிகா நடித்த MY3 வெப் சீரிஸ் சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது. அடுத்ததாக மீண்டும் நாஷா எனும் புதிய தெலுங்கு வெப் சீரிஸில் தற்போது ஹன்சிகா மோட்வானி நடித்து வருகிறார். 

மேலும் அடுத்தடுத்து அட்டகாசமான படைப்புகள் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் தொடர்ச்சியாக வலி வருவதற்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் ராஜ் துஷா இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள 105 மினிட்ஸ் எனும் திரில்லர் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாக தயாராகி விரைவில் வெளிவர இருக்கிறது. தொடர்ந்து மை நேம் இஸ் ஸ்ருதி, ரவுடி பேபி, காந்தாரி மற்றும் மேன் என வெவ்வேறு விதமான கதைக்களங்களில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கும் அட்டகாசமான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன இந்த வரிசையில் ஹன்சிகா மோட்வானி நடிப்பில் அடுத்த ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் தான் கார்டியன்.

இயக்குனர்கள் சபரி மற்றும் குரு சரவணன் இணைந்து இயக்க வித்தியாசமான ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த கார்டியன் திரைப்படத்திற்கு கதை , திரைக்கதை, வசனங்களை குரு சரவணன் அவர்கள் எழுதியிருக்கிறார். நடிகை ஹன்சிகா மோத்வானி உடன் இணைந்து சுரேஷ் மேனன் ஸ்ரீமன் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த கார்டியன் திரைப்படத்தில் பிரதீப் ரயான் மற்றும் டைகர் கார்டன் தங்கதுரை ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். முன்னணி இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். KA.சக்திவேல் ஒளிப்பதிவில் M.தியாகராஜன் படத்தொகுப்பு செய்யும் கார்டியன் திரைப்படத்திற்கு லால்குடி N இளையராஜா கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 

விஜி சதீஷ், அசார் மற்றும் ஸ்ரீ கிரிஷ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணியாற்றி இருக்கும் கார்டியன் திரைப்படத்திற்கு அர்சா மேத்தா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். கவிஞர் விவேகா இசையமைப்பாளர் சாம்.சிஎஸ் & கவிஞர் உமாதேவி ஆகியோர் கார்டியன் திரைப்படத்தின் பாடல்களை எழுதியிருக்கின்றனர் டான் அசோக் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். விரைவில் ஹன்சிகா மோத்வானியின் கார்டியன் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது கார்டியன் திரைப்படத்தின் டீசர் வெளியானது. மிரட்டலான ஹாரர் திரில்லர் திரைப்படத்திற்கான சிறப்பம்சங்கள் அனைத்தும் நிறைந்திருக்கும் வகையில் வெளிவந்திருக்கும் இந்த கார்டியன் படத்தின் டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கார்டியன் படத்தின் விறுவிறுப்பான அந்த டீசர் இதோ...