"இதுதான் அடுத்த கதை!" தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கொடுத்த ஸ்பெஷல் தகவல்! வீடியோ உள்ளே

தளபதி விஜயின் லியோ படம் பற்றி மனோஜ் பரமஹம்சா பகிர்ந்த தகவல்,manoj paramahamsa shared special details of thalapathy vijay in leo movie | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து பார்த்துக் காத்திருந்த தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவர்கள் தனது திரைப் பயணத்தின் பல சுவாரஸ்ய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் லியோ திரைப்படம் குறித்து உரையாடிய போது, 

“புகைப்பிடித்தலை குறித்து பேசும் பொழுது தன் அதன் பின்னால் இருந்த இரண்டு பின் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது சஞ்சய் தத் சார் சொல்கிறார், “இது என்ன தெரியுமா டி ஸ்லாஷ்..  இது நீ கொடுத்த பிளாக் டெவில் 25 பப்ஸ்.. அதைக் கேட்கும்போது அடேங்கப்பா இதற்கு பின்னால் இவ்வளவு அழகான கதை இருக்கிறதா? ஏனென்றால் நீ அவ்வளவு சீக்கிரம் யாராலும் சொல்ல முடியாது. ஹனி பேஜர் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பக்கம் பார்க்கும் போது அர்ஜுன் சார் இதுவரைக்கும் கொக்கேன் மற்ற போதை பொருட்கள் எல்லாம் கேள்விப்பட்டாச்சு இவர்  புதியதாக ஒன்று சொல்கிறார் டேதோரா. டேதோரா என்றால் என்ன? டேதோரா ஒரு பூ போல் உள்ளது அதிலிருந்து அவர் அதை தூவி விடுகிறார் இது உண்மைதாக ஒரு பேண்டஸி உலகத்திற்குள் சென்றது போல் இருந்தது. இதை பார்த்து பிறகு எனக்கு என்ன தோன்றியது என்றால் இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் வைத்திருக்கலாமே.. ஏனென்றால் இவ்வளவு ஆழமான கதை ஒன்று இருக்கிறது அதைப்பற்றி ஏன் அவர்கள் கூறவில்லை..” என அவை குறித்து கேட்டபோது, 

“இது தான் அடுத்த கதை.. ஆமாம் ஏனென்றால் எந்த கதைக்கு எது வேணும் என்று இருக்கிறது அல்லவா.. இப்பொழுது இந்த விஷயங்கள் எல்லாம் நீங்கள் என்ஜாய் செய்கிறீர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அதனால் இப்பொழுது அந்த ஸ்கிரிப்ட்டை அவர் நிறைய எழுதலாம். அதுதான் எங்கள் எண்ணம். ஆரம்பத்திலிருந்து நான் சொல்லிக் கொண்டே வருவது அது தான் இந்த கதையை அவர் (தளபதி விஜயின் பார்த்திபன் கதாபாத்திரம்) சொல்லவில்லை. இந்த படத்தில் இதுவரை வந்த எந்த முக்கியமான கதாபாத்திரங்களும் அதை சொல்லவில்லை. இப்பொழுது இதற்கு சம்பந்தமே இல்லாமல் ஒருவரை அழைத்து வந்து இந்த கதையை சொல்ல வைக்கிறோம். அவர் அவருடைய பார்வையில் தான் இதை அணுகுகிறார் சொல்கிறார். டைரக்டரின்  பார்வையில் இதை சொல்லவில்லை. இந்த ஸ்கிரிப்ட் சரியாக வேலை செய்தது என்றால் இந்த கதாபாத்திரங்களை வைத்து எந்த இடத்தில் வேணாலும் எவ்வளவு படங்கள் வேணாலும் LCUவின் கீழ் செய்ய முடியும். அவ்வளவு விஷயங்கள் இதற்குள் இருக்கிறது.” என தெரிவித்து இருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவர்களின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.