தளபதி விஜயின் அதிரடியான லியோ பட அடுத்த ஸ்பெஷல்... கவனத்தை ஈர்க்கும் "I’M SCARED" பாடல் லிரிக் வீடியோ இதோ!

தளபதி விஜயின் லியோ பட IM SCARED பாடல் லிரிக் வீடியோ,Thalapathy vijay in leo movie ordinary person lyric video out now  | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்திலிருந்து IM SCARED பாடல் லிரிக் வீடியோ வெளியானது. இந்திய சினிமா வியந்து பார்க்கும் வகையில் தளபதி விஜய் திரைப்படம் ரிலீசான முதல் நாளிலேயே அதிகபட்ச வசூல் செய்த படமாக 148.75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. தளபதி விஜயின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த இந்த லியோ திரைப்படம் இதுவரை முதல் வார இறுதியில் 461 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. 

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் - திரிஷா ஜோடி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இணைந்திருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

மனோஜ் பரமஹம்சா அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த லியோ திரைப்படத்தில் CG உதவியுடன் கழுதைப்புலி உடனான மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சி மிகவும் தத்ரூபமாக இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன ஒருபுறம் லியோ திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டாடப்பட்டாலும் மறுபுறம் படத்தின் இரண்டாம் பாதையை பல கலவையான விமர்சனங்களை சந்தித்திருக்கிறது இருப்பினும் தற்போது பிளாக்பஸ்டர் வெற்றியை எட்டி இருக்கும் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி இருக்கின்றனர். முன்னதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டால் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில் அதே நேரு உள் விளையாட்டு அரங்கில் தற்போது லியோ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றி விழா நடைபெற இருக்கிறது அதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் தற்போது லியோ திரைப்படத்திலிருந்து "I’M SCARED"  என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. லியோ திரைப்படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சிக்கு பிறகு வரும் இந்த ஒரு பாடல் தளபதி விஜயின் நடிப்பிற்கு தீனி போடும் வகையில் அமைந்திருந்தது மேலும் படத்தில் இந்த பாடலும் அதன் காட்சிகளும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. கவனத்தை ஈர்க்கும் அந்த பாடல் லிரிக் வீடியோ இதோ…