தீபாவளி பட்டாசாக வரும் ராகவா லாரன்ஸ் - SJ சூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLEX பட ஸ்பெஷல் ட்ரீட்... ரசிகர்களை கவர்ந்த 10000 PAX மியூசிக் வீடியோ இதோ!

ஜிகர்தண்டா DOUBLEX பட 10000 PAX மியூசிக் வீடியோ,raghava lawrence sj suryah in jigarthanda doublex 10000 pax music video | Galatta

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இணைந்த நடித்துள்ள ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தின் 10000 PAX மியூசிக் வீடியோ வெளியானது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி ஸ்டைலில் பல்வேறு விதமான கதைக்களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமான ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தை தற்போது கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கி இருக்கிறார். பக்கா ஆக்சன் காமெடி படமாக கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் இரண்டாவது படமாக வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு மீண்டும் ஜிகர்தண்டா மாதிரியான இன்னொரு பெரிய விருந்தை கொடுக்க முடிவு செய்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்த தருணத்தில் ஜிகர்தண்டா 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் மக்களின் மனம் கவர்ந்த படைப்புகளை வழங்கி வரும் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இணைந்து இந்த ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். முன்னதாக  நடிகர் விஷால் உடன் இணைந்து நடிகர் SJ.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது இதை தொடர்ந்து அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கில் ராம்சரண் நடித்துவரும் கேம் சேஞ்சர் படத்தில் தற்போது வில்லனாக SJ.சூர்யா நடித்து வருகிறார். அதேபோல் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 திரைப்படம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் கதை திரைக்கதையில் உருவாகும் அதிகாரம் படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் விரைவில் துர்கா எனும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். 

முதல்முறையாக ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இணைந்து நடித்திருக்கும் இந்த ஜிகர்தண்டா திரைப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ஷைன் டேம் சாக்கோ, சத்யன், அரவிந்த் ஆகாஷ், இளவரசு மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.ஜிகர்தண்டா படத்தைப் போலவே ஒரு இயக்குனருக்கும் கேங்ஸ்டருக்கும் இடையிலான அட்டகாசமான ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் ஜிகர்தண்டா DOUBLE X படத்திற்கு திரு என்கிற திருநாவுக்கரசு அவர்களின் ஒளிப்பதிவில், ஷபிக் முஹம்மத் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க விவேக் பாடல்களை எழுதி இருக்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படம் வருகிற நவம்பர் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் ஜிகர்தண்டா திரைப்படத்தின் 10000 PAX மியூசிக் வீடியோ தற்போது வெளியானது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் OFRO இணைந்து கலக்கி இருக்கும் இந்த 10000 PAX மியூசிக் வீடியோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த 10000 PAX மியூசிக் வீடியோ இதோ…