வெளிநாட்டில் தொடரும் தளபதி விஜயின் லியோ பட வசூல் வேட்டை... பாக்ஸ் ஆபிஸை அதிரவிடும் அதிகாரப்பூர்வ கலெக்ஷன் ரிப்போர்ட்!

தளபதி விஜயின் லியோ UK மற்றும் ஐரோப்பாவில் 35 கோடி வசூல்,thalapathy vijay in leo crossed 35crores in uk and europe | Galatta

தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பால் கொண்டாடப்படும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் UK மற்றும் ஐரோப்பாவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் அதிகபட்ச வசூல் செய்த சாதனையை தளபதி விஜயின் லியோ படம் படைத்திருக்கிறது. ரிலீஸான முதல் நாளிலேயே 148.75 கோடி வசூலித்த லியோ திரைப்படம் முதல் 7 நாட்களில் 461 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றிலும் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. ஆரம்பம் முதலில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய விஜயின் லியோ திரைப்படத்தை  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் உடன் இரண்டாவது முறையாக இணைந்து இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு (2022) உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து லியோ திரைப்படத்தின் மீதும் அதே எதிர்பார்ப்பு இருந்தது. 

தனக்கென தனி பாணியில் தொடர்ந்து அதிரடி ஆக்சன் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த லியோ திரைப்படத்தில் ஆக்சனில் புதிய உச்சம் தொட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்திய சினிமாவில் சிறந்த ஆக்சன் படம் என சொல்லும் அளவிற்கு லியோ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாகவும் மிரட்டலாவும் அமைந்திருந்தன. முதல்முறையாக CG பக்கம் சென்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதன் மூலமாகவும் ஆக்ஷனில் நிறைய சம்பவங்கள் செய்திருக்கிறார். குறிப்பாக படத்தின் முதல் காட்சியில் இடம் பெற்ற கழுதைப்புலி காட்சி மிகவும் நம்பகத்தன்மையோடும் மிரள வைக்கும் வகையிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தபோதும் இது மாதிரியான பல சிறப்பம்சங்களால் லியோ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய சினிமா அனுபவத்தை கொடுத்திருக்கிறது. 

தளபதி விஜயுடன் இணைந்து த்ரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். கைதி, விக்ரம் படங்களை தொடர்ந்து இயக்குனர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ படத்திற்கும் அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். 

பத்து நாட்களைக் கடந்து தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் தொடர்ச்சியாக வசூல் சாதனைகளையும் படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது UK மற்றும் ஐரோப்பாவில் தளபதி விஜயின் லியோ திரைப்படம் 35 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வைத்திருப்பதாக அந்த பகுதியில் லியோ திரைப்படத்தை வெளியிட்டு இருக்கும் அகிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. UKவில் 15 கோடிகளும் ஐரோப்பாவில் 20 கோடிகளும் என மொத்தம் 35 கோடிகள் லியோ திரைப்படம் இதுவரை வசூலித்திருப்பதாக அறிவித்திருக்கும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், “லியோ வெற்றி விழாவில் சந்திப்போம்… எல்லோரும் தளபதி விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு ரெடியா?” என குறிப்பிட்டு தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவு இதோ…
 

The numbers don't lie. With over ₹35 crores from the UK and Europe, #LEO is Thalapathy Vijay's grandest overseas BLOCKBUSTER. This isn't just a win; it's a WORLDWIDE CELEBRATION! 🙌🥳

See you all at the success meet.. is everyone ready for @actorvijay’s kutti story? 🥰 pic.twitter.com/U3toYgueEe

— Ahimsa Entertainment (@ahimsafilms) October 30, 2023