விஷால் - SJசூர்யாவின் பிளாக் பஸ்டர் மார்க் ஆண்டனி பட வெற்றிக்காக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஸ்பெஷல் பரிசு! வைரல் வீடியோ

மார்க் ஆண்டனி பட வெற்றிக்காக ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கார் பரிசு,adhik ravichandran gifted with a bmw car to for mark antony movie success | Galatta

நடிகர்கள் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டுகாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ரவிச்சந்திரனுக்கு ஸ்பெஷலான பரிசு ஒன்றை படக்குழு கொடுத்துள்ளது. திரிஷா இல்லனா நயன்தாரா , அன்பானவன் அடங்காதவன் அசராதவன் மற்றும் பஹீரா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் S.J.சூர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. மார்க் மற்றும் ஆண்டனி என்ற இரண்டு கதாபாத்திரங்களிலும் விஷால் தனது முழு உழைப்பை கொடுத்து இரண்டு கதாபாத்திரங்களுக்குமான வித்தியாசத்தை மிகவும் நியாயமாக கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார். மறுபுறம் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா பட்டப்பெயருக்கு தகுந்த மாதிரியே ஜாக்கி பாண்டியன் மற்றும் மதன் பாண்டியன் என்ற இரண்டு வேடங்களிலும் தனக்கே உரித்தான பாடி லாங்குவேஜிலும் டயலாக் டெலிவரிகளிலும் திரையரங்குகளை சிரிப்பொலியாலும் கர ஒலியாலும் அதிர வைத்தார்.

ரிது வர்மா கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் செல்வராகவன் & சுனில்  இருவரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துள்ளனர். கூடுதல் சர்ப்ரைஸாக தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக கொடி கட்டி பறந்த மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போல உருவம் கொண்ட நடிகை விஷ்ணு ப்ரியாவை நடிக்கவைத்து CGI உதவியுடன் சில்க் ஸ்மிதாவை  பட குழுவினர் மீண்டும் கொண்டு வந்தனர். அட்டகாசமான இரட்டை வேடங்களில் விஷால் மற்றும் SJ.சூர்யா இருவரும் இணைந்து நடித்திருக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தி வெளியீடாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மார்க் ஆண்டனி படம் 2023ம் ஆண்டு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. படத்தின் கதாபாத்திரங்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஆக்சன் என கம்ப்ளீட் பேக்கேஜாக மார்க் ஆண்டனி திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமாக தொடர்ந்து ரசிகர்கள் ரிப்பீட் மோடில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடினர். இந்த 2023 ஆம் ஆண்டில் மிகவும் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் திரையரங்குகளை தாண்டி OTTயிலும் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் மனதை கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்காக தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ ரக கார் ஒன்றை பட குழு தற்போது பரிசாக வழங்கியிருக்கிறது. இந்த அசத்தலான நிகழ்வின் வீடியோவை தனது Xபக்கத்தில் பகிர்ந்திருக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது நன்றியையும் தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோ இதோ…
 

Thank you dear @vinod_offl sir So sweet of you to gift me this beautiful BMW,Such a kind gesture Sir.
Thank you dear Mark Antony @VishalKOfficial anna for making this happen with dear Jackie Pandian @iam_SJSuryah sir + @gvprakash sirs Massacre,@selvaraghavanpic.twitter.com/O734Y7GLpV

— Adhik Ravichandran (@Adhikravi) October 30, 2023