கடந்த சில வருடங்களாக சமூகவலைத்தளங்களின் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.தங்கள் திறமையை அவர்களுடைய பக்கங்களில் வெளிப்படுத்தி பலரும் பலனடைந்துள்ளனர்.அப்படி பல நடிகர்கள் நடிகைகளை மற்றும் திறமையான படைப்பாளர்கள் படக்குழுவினர்,நடனக்கலைஞர்கள் என பலரை உருவாகியுள்ளது இந்த சோசியல் மீடியா.

டிக்டாக் மூலம் பிரபலமான பலரும் அடுத்ததாக இன்ஸ்டாகிராம்,யூடியூப் என்று பல வழிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர்.இப்படி உலகம் முழுவதும் பலர் தங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் படையை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் பிரபலமான யூடியூப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா முரளிதர்.இவர் பல சூப்பர்ஹிட் குறும்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தார்.இவரது ரசிகர்களுக்கு சோகமளிக்கும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது.

27 வயதான ஸ்ரேயா முரளிதர் சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த சிறிய வயதில் மாரடைப்பால் இவர் மறைந்தது ரசிகர்கள்,நண்பர்கள்,உறவினர்கள் உள்ளிட்டோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.