பாலிவுட் சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக, ஹிந்தி திரையுலகில் அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் கதாநாயகியாக இணைந்து நடித்துள்ள கத்ரீனா கைஃப் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலை நடிகை கத்ரீனா கைஃப் திருமணம் செய்துகொண்டார்.

நடிகை கத்ரீனா கைஃப்பும் விக்கி கௌஷலும் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து காதலித்து வருகின்றனர். முன்னதாக சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து இவர்களின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது.
 
இந்நிலையில் கத்ரீனா கைஃப் & விக்கி கௌஷல் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று (டிசம்பர் 9ஆம் தேதி) மிக கோலாகலமாக நடைபெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். பாலிவுட்டின் காதல் ஜோடியாக கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலின் திருமணத்திற்கு இந்திய திரையுலகைச் சார்ந்த பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கத்ரீனா கைஃப் & விக்கி கௌஷல் திருமண புகைப்படங்கள் இதோ…

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif)