ட்விட்டர் இந்தியாவில் பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலர் பயன்படுத்தும் முக்க்கிய சமூகவலைத்தளங்களில் ஒன்று.ட்விட்டரில் நம்பத்தக்க செய்திகள் விரைவில் கிடைப்பதால் பலரும் ட்விட்டர் பயன்படுத்துவதை விரும்புவார்கள்,அதோடு பிரபலங்களுடனும் பேசும் வாய்ப்புகள் சிலநேரம் கிடைக்கும்.ட்விட்டர் கடந்த சில வருடங்களாக அதிகம் ட்வீட் செய்யப்பட்ட  விஷயங்களை ட்ராக் செய்து ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தனர்.

கடந்த சில வருடங்களாக தென்னிந்திய படங்கள் இந்த லிஸ்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.ட்விட்டரில் அவ்வப்போது சில ஹாஸ்டேக்கள் ட்ரெண்ட் அடிக்கும்.வருடாவருடம் டிசம்பரில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட டாபிக்குகள் குறித்து ட்விட்டர் பதிவிடும் அப்படி இந்த வருடமும் லிஸ்ட்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட 10 ஹாஸ்டேக்களில் ஒன்றாக தளபதி விஜயின் இருக்கிறது.இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ள படம் சம்மந்தமான ஒரே ஹாஸ்டேக் மாஸ்டர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களை மாஸ்டர்,வலிமை,பீஸ்ட்,ஜெய் பீம்,வக்கீல் சாப் உள்ளிட்ட படங்கள் பிடித்துள்ளன.

திரைப்படங்கள் சார்பில் ட்விட்டரில் அதிகம் ரீ ட்வீட் மற்றும் லைக் செய்யப்பட்ட ட்வீட்டாக தளபதி விஜயின் ட்விட்டர் கணக்கில் வெளியான பீஸ்ட் பர்ஸ்ட்லுக் பிடித்துள்ளது .கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் தென்னிந்திய சினிமாவின் ஆதிக்கம் குறிப்பாக தமிழ் சினிமாவின் ஆதிக்கம் பெரிதளவில் உள்ளது.இது தமிழ் சினிமாவின் வளர்ச்சி பாதைக்கான ஒரு அறிகுறியாக இருப்பதாக ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.