தமிழ் திரை உலகின் இன்றியமையாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவரும் இணைந்து நடித்து வரும் நடிகர் யோகிபாபு,தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட், தல அஜீத்துடன் வலிமை, சிவகார்த்திகேயனுடன்  அயலான், விஜய் சேதுபதியுடன் கடைசி விவசாயி, விஷாலுடன் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

தொடர்ந்து குணச்சித்திர நடிகராகவும் கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வரும் யோகிபாபு பொம்மை நாயகி, காசேதான் கடவுளடா, பன்னிக்குட்டி மற்றும் மலையாள இயக்குனர் ரெஜிஷ் மித்தில்லா இயக்கத்தில் புதிய ஃபேண்டசி நகைச்சுவை திரைப்படம் என அடுத்தடுத்த படங்களில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2019ல் நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்து வெளிவந்த நகைச்சுவை திரைப்படம் தர்மபிரபு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற தர்ம பிரபு திரைப்படத்தின் இயக்குனர் முத்துக்குமரன். இதனையடுத்து இயக்குனர் முத்துக்குமரன் விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அடுத்ததாக யோகிபாபு மற்றும் சிவா இணைந்து நடித்துள்ள சலூன் திரைப்படத்தையும் முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் முத்துக்குமரனின் திருமணம் கும்பகோணத்தில் உள்ள சுவாமிமலை முருகன் கோவிலில் இன்று நடைபெற்றுள்ளது. இயக்குனர் முத்துக்குமரனின் திருமணத்திற்கு திரையுலகைச் சேர்ந்த அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் முத்துக்குமரன் திருமண புகைப்படம் இதோ…