நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் பிரபுதேவாவின் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. முன்னதாக அதிரடி ஆக்ஷன் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேள் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதனிடையே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபு தேவா நடித்துள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் பஹீரா, இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மாற்று திறனாளியாக மிரட்டலான கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்த பொய்க்கால் குதிரை ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

மேலும் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் டான் சாண்டி இயக்கத்தில் பிரபுதேவா & ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடிக்கும் ஃபிளாஷ்பேக் திரைப்படமும் தயாராகி வரும் நிலையில் மீண்டும் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் மை டியர் பூதம். இத்திரைப்படத்தை N.ராகவன் எழுதி இயக்கியுள்ளார்.

பிரபு தேவா & ரம்யா நம்பீசன் இணைந்து நடிக்க, குழந்தைகள் கொண்டாடும் ஃபேண்டசி காமெடி திரைப்படமாக உருவாகியிருக்கும் மை டியர் பூதம் படத்திற்கு D.இமான் இசையமைக்க U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் மை டியர் பூதம் படத்தின் கலக்கலான மோஷன் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த மோஷன் போஸ்டர் இதோ...