தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நகைச்சுவை மன்னனாக, பல கோடி தமிழ் மக்களின் மனதில் வைகை புயலாக மையம் கொண்டிருக்கும் நடிகர் வடிவேலு நடிப்பில் தனது 2-வது இன்னிங்சை மிகவும் வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். வைகைப்புயல் வடிவேலுவை மீண்டும் திரையில் காண பலகோடி தமிழ் ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். 

நீண்ட கால இடைவெளிக்கு பின் சமீபத்தில் வடிவேலுவின் மீது இருந்த தடை நீக்கப்பட்டது. தொடர்ந்து வடிவேலு புதிய திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்புகளும் வெளியானது. முன்னதாக இயக்குனர் சுராஜ் இயக்கத்தில்  சுந்தர்.C நடித்த தலைநகரம் படத்தில் ரசகர்களின் ஃபேவரட்டான வடிவேலுவின்  நாய் சேகர் கதாபாத்திரத்தை பெயராக கொண்ட நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் தயாராக உள்ளதாக சுராஜ் அறிவித்தார்.

லைகா புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியானது. வடிவேலு உடன் இணைந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 10ஆம் தேதி) நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் வெளியானது. வைகை புயல் வடிவேலுவின் மாஸ்ஸான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மோஷன் போஸ்டர் இதோ...