தமிழ் தொலைக்காட்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக மாறியவர் நக்ஷத்திரா நாகேஷ்.முதலில் சில சேனல்களில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் சன் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளியினாக சில வருடங்கள் இருந்து வந்தார்.இவற்றை தவிர விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான  ஜோடி நம்பர் 1-ல் பங்கேற்று அசத்தியுள்ளார்.

மேலும் பல விருது விழாக்கள்,பட ரிலீஸ் விழாக்களையும் தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார் நக்ஷத்திரா.சேட்டை,வாயை மூடி பேசவும்,மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இதை தவிர As Im Suffering From Kadhal என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான லக்ஷ்மி ஸ்டோர்ஸ் தொடரின் நாயகியாக நடித்து தனது திறமையை நிரூபித்தார் நக்ஷத்திரா..இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடரின் இரண்டாவது சீசனில் நடித்தார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார் நக்ஷத்திரா.

நக்ஷத்திரா தனது பள்ளி சீனியர் ராகவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார்.இவர்களது திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்து மழையில் புதுமண தம்பதியினர் உள்ளனர்.கலாட்டா சார்பாக நக்ஷத்திரா மற்றும் ராகவ் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்