விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அஷ்வின் குமார்.இதற்கு முன் சீரியல்கள்,ஆல்பம் பாடல்கள்,படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அஷ்வின்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து இவர் நடித்த ஆல்பம் பாடல்கள் பெரிய வெற்றியை அடைந்தன.அடுத்ததாக Trident Arts நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாகும் வாய்ப்பை பெற்றார் அஷ்வின்.என்ன சொல்ல போகிறாய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது.அதில் பேசிய அஷ்வின் சில சர்ச்சையான விஷயங்களை பேசினார்.அது பலரையும் புண்படுத்துவதாக அஷ்வினுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை சமூகவலைத்தளங்கள் மூலமும்,மீம்ஸ் மூலமும் தெரிவித்து வந்தனர்.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஷ்வின் தற்போது ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார்.அதில் தனது முதல் பட ஆடியோ ரிலீஸ் மேடை , ரசிகர்களின் கரகோஷம் உள்ளிட்டவையின் உற்சாகத்தில் சில கருத்துகளை நான் பேசத்தெரியாமல் உளறிவிட்டேன் அது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் சொல்லப்பட்டது அல்ல,அப்படி யாரேனும் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று அவர் பேசியுள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்